யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கலின்போது பங்கேற்ற திமுக எம்.பிக்கள்.. இவங்களும் இருக்காங்களா?
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது திமுக சார்பில் 3 எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழு மூச்சாக இறங்கின

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்
அதன் விளைவாக இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக, தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் சந்திரசேகர் ராவ் கலந்துகொள்ளவில்லை. இதில் சரத் பவார், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு மூவரும் இதற்கு சம்மதிக்காததால் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

வேட்புமனுத் தாக்கல்
இந்த நிலையில் இன்று யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி. ஆ.ராசா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கே.டி.ராமா ராவ் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.

யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?
பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகள் பல்வேறு அரசு பதவிகளில் அங்கம் வகித்தவர். யஷ்வந்த் சின்ஹா 1986 ஆம் ஆண்டு பாஜகவில் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய நிதியமைச்சராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. மோடி - அமித்ஷா மீதான அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications