இந்தியாவின் ‛பங்கர் பஸ்டர்’ இதுதான்.. பூமிக்கடியில் 328 அடி சென்று வெடிக்கும்.. USயை விட பவர்புல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஈரானின் ஃபோர்ட்டோ அணுசக்தி மையங்களை பி 2 பாம்பர்ஸ் போர் விமானங்கள் மூலம் GBU-57 என்ற ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசி அழித்தது. மொத்தம் 14 குண்டுகளை அமெரிக்கா அந்த அணுசக்தி மையங்கள் மீது ஈரானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்நிலையில் தான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நம் நாடும் மோசமான அழிவை தரும் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணையை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இது அமெரிக்காவின் ‛பங்கர் பஸ்டர்' குண்டை விட பலமடங்கு ஆபத்தானது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்காவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. ஈரானை எடுத்து கொண்டால் அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை 3 இடங்களில் செறிவூட்டும் பணியை மேற்கொண்டது. ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்களில் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் நடந்தது.

bunker buster agni 5 india 5

இதில் ஃபோர்டோ என்பது மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையமாகும். இது மலைக்கு நடுவே பூமிக்கடியில் 30 முதல் 260 அடி ஆழத்தில் பல அடுக்காக அமைந்துள்ளது. பாதாள அறையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை. அதனை அழிப்பதற்கான குண்டு இஸ்ரேலிடம் இல்லை.

இதையடுத்து தான் அமெரிக்கா திடீரென்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ ஆகிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள், ஏவுகணைகளை வீசி அமெரிக்கா அழித்தது. பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருந்த ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா தனது பி 2 பாம்பர்ஸ் போர் விமானங்கள் மூலம் GBU-57 எனும் 14 ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசி அழித்தது. ஃபோர்டோ போன்ற பூமிக்கடியில் இருக்கும் வலுவான கட்டமைப்புகளை அழிக்கும் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இதனால் அமெரிக்கா களமிறங்கி அந்த இடத்தை அழித்தது. இது பெரிய அளவில் பேசும்பொருளானது.

இந்த ‛பங்கர் பஸ்டர்' குண்டு என்பது குறிப்பிட்ட இலக்கின் மீது வீசப்படும்போது அது 200 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி சென்று அதன்பிறகு தான் வெடிக்கும். இதனால் தரையில் இருந்து 200 மீட்டர் ஆழம் வரையிலான கட்டுமானம் அழிந்து விடும். இப்படித்தான் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா அழித்தது. இந்நிலையில் தான் அமெரிக்காவுக்கு நிகராக நம் நாடும் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணைகயை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. அதாவது நம் நாட்டிடம் ஏற்கனவே நம்மிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணையை மத்திய பாதுகாப்பு துறையின் நிறுவனமான டிஆர்டிஓ (Defence Research and Developement Organistion or DRDO) தயாரித்து இருந்தது.

இந்த அக்னி 5 ஏவுகணை நம்நாட்டின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகையை சார்ந்தது. இதன் ரேஞ்ச் 7 ஆயிரம் கிலோமீட்டராகும். அணுஆயுதங்களை சுமந்து செல்லும் தன்மை கொண்டது தான் இந்த அக்னி 5 ஏவுகணை. மணிக்கு 29,400 கிலோமீட்டர் வேகத்தில் சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது இந்த அக்னி-5 ஏவுகணை.

இந்த அக்னி 5 ஏவுகணையில் சில மாற்றங்கள் செய்து அக்னி 5 ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணையை தயாரிக்கும் பணியை டிஆர்டிஓ தொடங்கி உள்ளது. தற்போது 2 ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஒன்று தரைக்கு மேற்பரப்பில் உள்ள இலக்கை தாக்கும் வழக்கமான ஏவுகணை. இன்னொன்று தான் பங்கர் பஸ்டர் ஏவுகணை. இது ஈரான் மீது அமெரிக்கா போட்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை விட சக்திவாய்ந்ததாகவும், எளிமையாக எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலும் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனென்றால் அமெரிக்காவிடம் ‛பங்கர் பஸ்டர்' குண்டு தான் இருக்கிறது. இந்த குண்டை எதிரி நாடுகள் மீது வீச வேண்டும் என்றால் அமெரிக்கா தனது பி2 பாம்பர்ஸ் ரக போர் விமானத்தை எதிரி நாடுகளுக்கு அனுப்பி இலக்கின் மேல்பகுதியில் பறக்கவிட்டு குண்டுகளை வீச வேண்டும். இது மிகவும் ஆபத்தானது. எதிரிகள் குண்டுவீச செல்லும் விமானங்களை கண்டுபிடித்துவிட்டால் சிக்கலாகிவிடும். அதோடு இந்த விமானம் பறந்து சென்று இலக்கின் மீது ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீச அதிக செலவு ஏற்படும்.

ஆனால் நம் நாடு ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணையை உருவாக்குகிறது. இதன்மூலம் எளிமையாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே இலக்கை நோக்கி அந்த ஏவுகணையை அனுப்பி வைக்க முடியும். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டு 13,000 கிலோ எடை கொண்டது. அதில் 3,000 கிலோ மட்டுமே வெடிபொருள் இருக்கும்.

ஆனால் நம் நாடு தயாரிக்கும் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணையில் வெடிபொருள் மட்டுமே 7,500 கிலோ இருக்கும். எனவே அமெரிக்காவின் பங்கர் பஸ்டரை விட நம் நாட்டின் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை பெருத்த சேதத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருக்கும் கான்கிரீட் பில்டிங், பாதாள அறை என எதுவாக இருந்தாலும் கூட 80 முதல் 100 மீட்டர் (சுமார் 264 அடி முதல் 328 அடி) ஆழம் வரை நம் நாட்டின் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை முதலில் செல்லும். அதன்பிறகு தான் பயங்கர சத்துடன் வெடித்து சிதறும். இதன்மூலம் தரையின் மேல்பகுதியில் இருந்து பூமிக்கடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரையிலான அனைத்து கட்டமைப்புகளும் சல்லி சல்லியாக நொறுங்கிவிடும்

இந்த ஊடுருவல் தூரம் அமெரிக்காவின் ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளுக்கு 200 அடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஆனால் நம் நாட்டின் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணைக்கு 328 அட என்ற அளவுக்கு உள்ளது. இருப்பினும் அதிகப்படியான வெடிப்பொருட்களை நம் ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை எடுத்து செல்லும் என்பதால் இது அமெரிக்காவின் ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை விட பேரழிவை தரும் ஆயுதமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் பொதுவாக அக்னி 5 ஏவுகணை 7 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறந்து சென்று தாக்கும். ஆனால் இப்போது நாம் தயாரிக்கும் இந்த அக்னி-5 ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை 2,500 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே செல்லும். அதிகப்படியான எடை மற்றும் பூமிக்கடியில் நுழைந்து தாக்க வேண்டும் என்பதால் அதன் ரேஞ்ச் குறைக்கப்பட உள்ளது. இருப்பினும் இந்த 2,500 கிலோமீட்டர் ரேஞ்ச் என்பது நம் நாட்டின் அண்டை நாடுகளை பதம் பார்க்க போதுமானதாகும்.

இந்த ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை பயன்படுத்தி நம்மை சீண்டும் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து அடிக்க முடியும். இது ஹைபர் சோனிக் ரக ஏவுகணை. அசுர வேகத்தில் பறந்து அடிக்கும். ஒலியை விட 8 முதல் 20 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும்.

அதாவது, மணிக்கு 9,800 கிலோ மீட்டர் வேகம் முதல் 24,500 கிலோ மீட்டர் வேகம் வரை சென்று எதிரிகளின் பாதாள இலக்குகளை சிதைத்து விடும். இவ்வளவு வேகத்தில் பறப்பதால் இதை இடைமறிப்பது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமானது. இதனால் அக்னி-5 ‛பங்கர் பஸ்டர்' ஏவுகணை என்பது நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் மிகவும் முக்கியமான ஆயுதமாக மாறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+