2024 இறுதியில் ஆளில்லா பெண் ரோபோ வியோம்மித்ராவை விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ- அமைச்சர் ஜிதேந்திரசிங்
டெல்லி: இஸ்ரோ இந்த ஆண்டு பெண் தோற்றம் கொண்ட விண்வெளி ரோபோ "வியோம்மித்ரா" வை விண்வெளிக்கு அனுப்பும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சியத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் "ககன்யான்" திட்டத்துக்கு முன்னதாக பெண் தோற்றம் கொண்ட விண்வெளி ரோபோ "வியோம்மித்ரா" இந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படும்.

ஆளில்லா விண்வெளி விமானமான "வியோம்மித்ரா"-வை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்கள் செல்லும் "ககன்யான்" திட்டத்தை அடுத்த ஆண்டு, அதாவது 2025-ல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. "வியோம்மித்ரா" என்பது விண்வெளி என்றும் "மித்ரா" என்பது நண்பர் என்றும் பொருள். இரண்டு சமஸ்கிருத சொற்களிலிருந்து பெறப்பட்ட பெயர் இது. ந்த பெண் தோற்றம் கொண்ட ரோபோ, விண்வெளி அளவுருக்களை கண்காணித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற திறன் கொண்டது. இந்த ரோபோவால் ஆறு பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
"வியோம்மித்ரா" என்றால் என்ன?: சமஸ்கிருதத்தில் வியோம் என்பது சொர்க்கம் என்பதைக் குறிக்கும். மித்ரா என்பது நண்பரைக் குறிப்பிடுவது. விண்கலங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, விண்வெளி வீரர்களுடன் உரையாடுவது உள்ளிட பணிகளை வியோம்மித்ரா மேற்கொள்ளும். ஆளில்லா விண்வெளி திட்டத்தில் சூழலியல் பயன்பாட்டு அமைப்புகளை சோதனை செய்ய வியோம்மித்ரா பயன்படுத்தப்படும் என்கிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications