கொரோனா தடுப்பு பணியாளர்களை ஊக்குவிக்க பெருநகரங்களில் மட்டும் ஒரே நேரத்தில் கைதட்டிய பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி/சென்னை: கொரோனா தடுப்பு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பெருநகரங்களில் ஒரே நேரத்தில் இன்று மாலை 5 மணிக்கு பொதுமக்கள் இசைஒலியுடன் கை தட்டி ஊக்கப்படுத்தினர். ஆனால் கிராமப்புறங்களில் இத்தகைய நிகழ்ச்சி பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை.

Recommended Video

    மருத்துவ ஊழியர்களுக்காக கைதட்டி ராயல் சல்யூட் !

    கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்த மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    #IndiaSalutes: Metro Cities People only come out to celebrate, encourage corona warriors

    இதன் ஒருபகுதியாக மாலை 5 மணிக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளில், பால்கனிகளில் ஒன்று திரண்டு இசை ஒலித்து கை தட்டினர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரை ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதனை ஏற்றுதான் நாடு முழுவதும் பொதுமக்கள் கைகளை தட்டி மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தினர். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் 5 நிமிட நேரம் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    புதுவையில் முதல்வர் நாராயணசாமி தமது வீட்டின் பால்கனியில் நின்று கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார். பெரும்பாலான மாநில முதல்வர்இதேபோல் மொட்டை மாடிகளிலும் வீடுகளின் முன் நின்றும் கைகலை தட்டினர்.

    ஆனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில்தான் இந்த கைதட்டலும் நன்றி தெரிவித்தலும் நடைபெற்றது. நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இந்த கைதட்டல் முறையும் எடுபடவில்லை. அவ்வளவு ஏன்? இதற்கான சைரன் ஒலிகளும்கூட கிராமப்புறங்களில் எழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+