உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 19.89 கோடி; இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1,808 பேர் மரணம்
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,89,75,120 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் 1,808 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா 3-வது அலை தாக்கம் நீடித்து வருகிறது.

அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,431. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 242. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 35,747,156. அந்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,666,117 .
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 41,790. இந்தியாவில் நேற்று கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 542. இந்தியாவில் இதுவரை மொத்தம் 31,654,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,812,873 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் நேற்று 542 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இந்தியாவில் மொத்தம் 424,384 பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்.
பிரேசிலில் நேற்று 37,582 பேருக்கும் இந்தோனேசியாவில் 37,284 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பிரேசிலில் 925 பேரும் இந்தோனேசியாவில் 1808 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். இன்று இந்தோனேசியாவில் 1606 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 4,10,952 ஆக இருந்தது. இன்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,17,327. இந்தியாவில் மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.30%.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.42%ஆக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் 5%க்கும் கீழ், 2.34%ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.82 கோடி. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 47 கோடியைக் கடந்தது. மொத்தம் 47,02,98,596 தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளன.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கேரளாவில் நேற்று 20,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிராவில் 6,479 பேருக்கும் ஆந்திராவில் 2,287 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. இம்மாநிலத்தில் நேற்று 157 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 1990 பேருக்கும் கர்நாடகாவில் 1875 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க











Click it and Unblock the Notifications