முதலீடு செஞ்சோம்.. ஆனா செபியில் சேர்வதற்கு முன்பு.. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு மாதபி புச் பதில்!
டெல்லி: ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் குறிப்பிட்ட முதலீட்டு நிதியத்தில் 2015 ல் தானும், தன் கணவரும் முதலீடு செய்திருந்ததை செபி தலைவர் மாதவி பூரி புச் ஒப்புக்கொண்டுள்ளார். செபியில் இணைவதற்கு 2 ஆண்டுக்கு முன்பு, சிங்கப்பூரில் வசித்தபோது முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததாக மாதவி விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதானி குழுமம் குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை, மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ரிப்போர்ட்டில், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க்.
அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச் அதானியின் சகோதரர் உடன் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் மாதபி பூரி புச் மற்றும் தவால் தம்பதியர். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தங்களது நிதி பரிவர்த்தனைகள் எப்பொழுதும் வெளிப்படையானதாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் முதலீடு 2015 இல் இருவரும் சிங்கப்பூரில் வசித்தபோது, அதாவது மாதபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்டது. மாதபியின் கணவர் தவாலின் தலைமை முதலீட்டு அதிகாரி அனில் அஹுஜா, பள்ளி மற்றும் ஐஐடி டெல்லியில் இருந்து தவாலின் நண்பர் மற்றும் சிட்டி பேங்க், ஜேபி மோர்கன் மற்றும் 3i குரூப் பிஎல்சி ஆகியவற்றின் முன்னாள் ஊழியர் என்பதால், பல ஆண்டுகளாக நம்பிக்கையான முதலீட்டு ஆலோசகராக உள்ளார்.
எந்த நேரத்திலும் எந்த அதானி குழும நிறுவனத்தின் எந்தப் பத்திரம், பங்கு அல்லது டெரிவேட்டிவ் ஆகியவற்றில் நாங்கள் நிதி முதலீடு செய்யவில்லை. நாங்கள் ஒரு சாதாரண தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலகட்டம் உட்பட அனைத்து நிதி ஆவணங்களையும் வெளிப்படுத்துவதில் எந்தவொரு தயக்கமும் எங்களுக்கு கிடையாது. உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களுக்காக ஹிண்டன்பர்க்கிற்கு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஷோ காஸ் நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் செபியின் நம்பகத்தன்மையையும் அதன் தலைவரின் நற்பெயரையும் சீர்குலைப்பதற்கு தேர்ந்தெடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை உண்மை இல்லை.. ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. செபி தலைவர் மாதபி பரபரப்பு விளக்கம்
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெர்முடா மற்றும் மொரீஷியஸில் உள்ள தெளிவற்ற நிதிகள் உட்பட, மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோர் கடல்கடந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
அதானி தொடர்புடைய நிறுவனங்களின் பங்கு விலைகளை உயர்த்துவதற்கு இது பயன்படுத்தப்பட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், புச் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார், எந்த நேரத்திலும் அதானி குழுமத்துடன் தொடர்புடைய எந்தவொரு பத்திரத்திலும் இந்த நிதி முதலீடு செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications