"அய்யோ சாவு பயத்தை காட்டுதே ஈரான்".. சீனாவிடம் பாகிஸ்தானை மரண ஓலமிட வைத்த அதிபர் இப்ராஹிம் ரைசி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிடம் அவ்வப்போது வாலாட்டிக் கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் அண்டை நாடான ஈரானையும் சீண்டிப் பார்த்தது. ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி திருப்பி அடித்ததில் சீனாவிடம் போய் கதறி அழுது மத்தியஸ்தத்துக்கு அழைத்து வந்தது பாகிஸ்தான்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரைசியின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன. ரைசியை இஸ்ரேல் படுகொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Iran President Ebrahim Raisi gave lesson to Pakistan with Air Strikes

2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக இருந்து வந்த ரைசியின் பதவி காலம் ஒவ்வொரு நொடியும் அணு உலை வெப்பத்தைக் கொண்டதாகவே இருந்து வந்தது. குறிப்பாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தைத் தொடர்ந்து 3-வது உலகப் போரை நோக்கி தள்ளும் அளவுக்கு ஈரான் பங்களிப்பும் இருந்து வருகிறது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பதவி காலத்தில் பாகிஸ்தான் வாங்கிய பதிலடிகள் மிக முக்கியமானவை. பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினர்.

சீனா தங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்கிற அசட்டு தைரியத்தில் திடீரென அண்டை நாடான ஈரானின் சிஸ்தான் பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 11 ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஈரான் ராணுவ தளபதியும் ஒருவர். உலகின் வல்லரசுகளையே வேட்டையாடுகிற ஈரானுக்கு சுண்டைக்காய் பாகிஸ்தான் எம்மாத்திரம்?

ஈரான் தனது அதிரடி பதிலடியைக் கொடுத்தது. பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணப் பகுதி மீது ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் டிரோன்கள் மூலமும் பாகிஸ்தான் பகுதிகளை குறிவைத்து தாக்கியது ஈரான். ஆனாலும் அடங்காத பாகிஸ்தான், ஈரானுடன் மோதலுக்குப் போனது. பாகிஸ்தானின் போர் விமானங்கள் ஈரானுக்குள் பறந்து குண்டுகளை வீசின. ஆனால் பலுசிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என நாடகமாடியது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய ஆட்டங்களை ஈரானின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி நினைத்திருந்தால் ஒரே அட்டாக்கில் முடித்துவிட்டிருக்க முடியும். பாகிஸ்தானின் கதையையே முடிக்கக் கூடிய வல்லமை கொண்ட நாடுதான் ஈரான். ஆனால் அண்டை நாடு என்பதால் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பொறுமையுடன் செயல்பட்டார். ஈரானின் உக்கிர கோபத்தை ஒருவழியாக உணர்ந்து கொண்ட பாகிஸ்தான் வேறுவழியே இல்லாமல் 'நண்பேன்டா' சீனாவை 'சமாதான' பஞ்சாயத்துக்கு அழைத்து வந்தது. இதனால் பிழைத்துப் போகட்டும் பாகிஸ்தான் என கை கழுவிவிட்டார் அதிபர் இப்ராஹிம் ரைசி. இதன் பின்னர்தான் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு சென்று தக்க அறிவுரை வழங்கிவிட்டு திரும்பினார் ரைசி என்பது சரித்திரம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+