நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்!
டெல்லி: மத்திய கிழக்கில் மோதல் தொடரும் சூழலில், கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளையை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸை கடந்து இந்தியாவை நோக்கி வந்த கப்பல் திடீரென சீனாவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள சூழலில், அதுவே உலக நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளுக்கு ஹார்முஸ் வழியாகவே கச்சா எண்ணெய், எல்பிஜி வரும் சூழலில் இது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான்
ஹார்முஸை கையில் எடுத்துள்ள ஈரான் அங்குக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டுமே அனுமதிப்போம் என ஈரான் சொல்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது. இதுவே சிக்கலுக்குக் காரணம்.
என்ன தான் இந்தியக் கப்பல்களை அனுமதிப்போம் என ஈரான் சொன்னாலும் கூட, சில சிக்கல்களால் இந்தியக் கப்பல்களால் ஹார்முஸை அமைதியாகவும் விரைவாகவும் கடக்க முடியவில்லை. இப்போதும் கூட ஹார்முஸ் பகுதியில் 14 முதல் 18 இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அந்த கப்பல்களைப் பத்திரமாக அழைத்து வரும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
சீனாவுக்கு திரும்பியது
மறுபுறம் இந்த மோதல்களுக்கு நடுவிலும் ஈரான் தனது கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்தே வருகிறது. போருக்கான வருவாய் தேவைப்படும் சூழலில், அதற்காகவே இதுபோல கச்சா எண்ணெய் விற்பனையில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஹார்முஸை கடந்த கப்பல் ஒன்று, இந்தியாவுக்கு வரும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடுக்கடலில் யூடர்ன் போட்டுள்ளது. இப்போது அந்த கப்பல் சீனாவை நோக்கிச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி நடுக்கடலில் ரூட்டை மாற்றிய கப்பல் 2002ல் கட்டப்பட்ட 'பிங் ஷுன்' (Ping Shun) என்ற கப்பலாகும். அதிகபட்சம் 1.20 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்யை ஏற்றி வரக்கூடிய அஃப்ராமக்ஸ் (Aframax) வகை கப்பலான இதன் மீது அமெரிக்கா கடந்த 2025ல் பொருளாதாரத் தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது
இந்த கப்பல் தான் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சீனா பக்கம் திரும்பியுள்ளது. சீனாவில் உள்ள டோங்கியிங் துறைமுகத்திற்கும் செல்வதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கெப்லர் தெரிவித்துள்ளது. அந்த கப்பல் குஜராத்தில் உள்ள வாடினர் துறைமுகத்திற்கு வரும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அது திடீரென இந்தியா பக்கம் வராமல் தெற்கு நோக்கித் திரும்பி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
காரணம் என்ன
எஸ்வதினி (Eswatini) நாட்டின் இந்த கப்பல், அதன் டிரான்ஸ்பாண்டர்கள் மூலம், ஏப்ரல் 4ஆம் தேதி இந்தியாவின் வாடினர் கடல் முனையத்திற்கு வருவதாகக் கூறியிருந்தது. ஆனால், அது இப்போது இந்தியாவுக்கு வரவில்லை. இருப்பினும், இதுபோல தகவல் தெரிவித்தால் நிச்சயம் அங்கு வர வேண்டும் என இல்லை. கடைசி நேரத்தில் எங்குச் செல்ல வேண்டும் என்ற இடம் மாறலாம்! கச்சா எண்ணெய் விலை, இன்சூரன்ஸ், கப்பல் பணியாளர்கள் அல்லது ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களால் திசை மாறியிருக்கலாம் எனக் குறிப்பிட்டார். இருப்பினும், திசை மாறியது தொடர்பாக இந்தியா தரப்பிற்கு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வரவில்லை என்கிறார்கள்.
வளைகுடா போரால் கச்சா எண்ணெய் உயர்ந்த சூழலில், அதைக் கட்டுப்படுத்த ஈரான் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய அமெரிக்கா கடந்த மார்ச் 21ம் தேதி அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications