ரயிலிலும் சொமேட்டோ.. பிடித்த உணவை இனி சாப்பிடலாம்.. ரயில்வே வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.. அடடே செம!
டெல்லி: ரயில் பயணத்தின் போதும் பயணிகள் தங்கள் விருப்பமான உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். இதற்காக சோமேட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை ஐ.ஆர்.சி.டிசி அளிக்க உள்ளது. இந்திய ரயில்வே உணவு கழகத்தின் இந்த புதிய அறிவிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் தேவைக்காக தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்கி வருகின்றன. ரயில்களை பொறுத்தவரை மலிவான கட்டணத்துடன் பாதுகாப்பான சொகுசான பயணத்தை வழங்குவதால் வசதி படைத்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரயில்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.

ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு புதுமையான முயற்சிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பயணிகள் ரயில் பயணத்தின் போது உணவு சேவையை மேம்படுத்தும் விதமாக சோமோட்டோவுடன் கை கோர்த்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
இ கேட்டரிங்: இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி. தனது இ கேட்டரிங் வழியாக ரயில் பயணிகளுக்கு தேவையான உணவினை வழங்கி வருகிறது. இருந்த போதிலும் பயணிகளுக்கு தாங்கள் விரும்பிய உணவை ரயில் பயணத்தின் போது பெற முடியவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. இதை போக்கும் வகையில் தான் தற்போது சோமோட்டாவுடன் கை கோர்த்துள்ள ஐ.ஆர்.சிடி.சி ரயில் பயணிகளுக்கு விருப்பமான உணவை வழங்க இருக்கிறது.
இதன்படி, சொமேட்டோ உதவியுடன் தனது இ கேட்டரிங் இணையதளம் வாயிலாக ரயில் பயணிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவுகளை பெறும் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக டெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாராணசி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் இந்த திட்டத்தை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
விரைவில் நாடு முழுவதும்: இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இ கேட்டரிங் வெப்சைட் மூலம் பயணிகள் முன்கூட்டி ஆர்டர் செய்த உணவுகளை வழங்கவும், டெலிவரி செய்யவும் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் சோமோட்டோவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மூலம் ரயில் பயணிகள் பயணத்தின் போதும் தங்களுக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொள்ள முடியும் எனத்தெரிகிறது. விரைவில் இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications