இந்தியா இப்போ இருக்கிற நிலையில்.. ஐ.பி.எல் போட்டிகள் தேவைதானா?.. ஆடம் கில்கிறிஸ்ட் நறுக் கேள்வி!
டெல்லி: இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது அவசியமா? என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. தினமும் புதிய பாதிப்புகள் உச்சத்தில் சென்று கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லை. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மகாராஷ்டிரா, டெல்லியில் தினமும் ஏராளமானோர் உயிரையிழந்து வருகின்றனர்.
இப்படி நாட்டில் நெருக்கடி நிலை நிலவி வர மற்றொரு புறம் சென்னை, மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அடுத்து டெல்லி, ஆமதாபாத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்ற போதிலும் இந்த கஷ்டமான நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தேவையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதே கேள்வியைத் தான் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கில்கிறிஸ்ட் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பயப்படும் வகையில் தொடர்ந்து அதிகரிதது வருகிறது. இந்தா நிலையில் அங்கு நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? அல்லது மக்களைத் தொற்றில் இருந்து திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? இது எதுவாக இருந்தாலும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என தெரிவித்து உள்ளார்.
Best wishes to all in India 🇮🇳 Frightening Covid numbers. #IPL continues. Inappropriate? Or important distraction each night? Whatever your thoughts, prayers are with you. 🙏
— Adam Gilchrist (@gilly381) April 24, 2021
ஆடம் கில்கிறிஸ்ட்டின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ''நீங்க சொல்றது சரிதாங்க.. உங்களுக்கு தெரியுது.. ஆனா இங்க உள்ளவங்களுக்கு தெரியலையே'' என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதே வேளையில் ''இந்த துன்பமான காலத்துல எங்களுக்கு ஆறுதலாக இருப்பது ஐ.பி.எல் போட்டிகள்தான்'' என்று வேறு ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications