அணுகுண்டு ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்க முடியுமா? விஞ்ஞானிகள் சொல்வது இதுதான்!
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஷெபாஷ் ஷெரிப், தனது நாட்டின் அணு ஆயுத ஆணைய அதிகாரிகளுடன் முக்கிய கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருக்கிறார். ஒருவேளை பாகிஸ்தான் அணு குண்டை வீசினால் அதை நம்மால் இடைமறித்து தாக்க முடியுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்த உலகம் ஏற்கெனவே இரண்டு அணு ஆயுத தாக்குதல்களை பார்த்திருக்கிறது. மூன்றாவது தாக்குதல் நடந்துவிடக்கூடாது என்பதில் அனைத்து நாடுகளும் கவனமாக இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அணு ஆயுதங்களை இடைமறித்து தாக்குவதற்கான ஏவுகணைகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு ஆம் என்றே விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். அமெரிக்காவிடம் தாட், ரஷ்யாவிடம் எஸ் 500, இஸ்ரேலிடம் அயன்டோம் மற்றும் டேவிட் ஸ்லிங் போன்ற இடைமறிப்பு ஏவுகணைகள் இருக்கின்றன. இது எந்தவிதமான ஏவுகணை தாக்குதலையும் முறியடிக்கும். ஆனால் 100% முறியடிக்குமா? என்று கேட்டால் அதற்கு இல்லை என்றே பதில் வருகிறது.
இந்தியாவிடம் பிஎம்டி தொழில்நுட்பம் இருக்கிறது. இது ப்ரித்வி ஏர் டிபென்ஸ் மற்றும் அட்வான்ஸ் ஏர் டிபென்ஸ் என இரண்டு வகை ஏவுகணைகளை கொண்டிருக்கிறது. இதில் ப்ரித்வி ஏவுகணைகள் 2000 கி.மீ வரை இலக்கை தாக்கும். அதே நேரம் 80 கி.மீக்கு முன்கூட்டியே ஏவுகணை வருவதை கண்டறித்து தாக்கும். அட்வான்ஸ் ஏர் டிபென்ஸ் ஏவுகணை, 1500 கி.மீ வரை இலக்கை தாக்கும். 30 கி.மீக்குள் எந்த ஏவுகணைகளும் உள்ளே நுழையாதவாறு பார்த்துக்கொள்ளும்.
ஆனால் 5000 கி.மீக்கு அப்பால் இருந்து ஏவுகணை ஏவப்பட்டால் அதை தடுப்பது கஷ்டம். அதேபோல ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதை தடுப்பது சாத்தியமில்லாத காரியமாகும். எனவே அணு ஆயுதத்தை ஏந்தி வரும் ஏவுகணைகள் ஒரே நேரத்தில் பல ஒன்றாக வந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அணு ஆயுத ஏவுகணைகள் இந்த இடத்திலிருந்து தான் ஏவப்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டால் அந்த இடத்தை தாக்கி அழித்து ஏவுகணை தாக்குதலை நிறுத்தலாம். அதேபோல ஹாக் செய்து ஏவுகணை தாக்குதலின் இலக்கை மாற்றலாம். இது மட்டும்தான் 100% தாக்குதலை தடுக்கும் வழிமுறையாகும்.
இப்போது வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே ட்ரோன் அளவில்தான் பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இது பெரிய போராக வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான் பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் விதமாக தனது நாட்டின் அணுசக்தி கட்டளை அமைப்பு கூட்டத்திற்கு பாக் அதிபர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அணு ஆயுதங்களை உலகம் முழுவதும் வெறும் 9 நாடுகள்தான் கொண்டிருக்கின்றன. மொத்தமுள்ள அணு ஆயுதங்களில் 88% அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருக்கிறது. இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170-200 வரை அணு ஆயுதங்களும் இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நாடுகள் அதை பயன்படுத்துவது குறித்து கொள்கைகளை கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் கொள்கை 'நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம். எதிரி தாக்கினால் பயன்படுத்துவோம்' என்பதுதான்.
பாகிஸ்தானின் அணு ஆயுத பயன்பாடு கொள்கை தெளிவில்லாமல் இருக்கிறது. பாதிப்புகளை பொறுத்து பயன்படுத்துவோம் என்றும், நாட்டை காக்க பயன்படுத்துவோம் என்று கூறி வருகிறது. இப்படி இருக்கையில்தான் அணு ஆயுத கூட்டத்தை அந்நாடு நடத்துகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications