தூக்கி அடிக்கும் ஜேஎன்1 வகை கொரோனா.. நாம் போட்ட வேக்சின்களை நம்மை காக்குமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜேஎன் 1 கொரோனா வகை பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ள நிலையில், இது தற்போதுள்ள கொரோனா வேக்சின்களுக்கு எதிராகப் பலன் தருமா என்பதைப் பார்க்கலாம்

கேரளாவில் இப்போது கண்டறியப்பட்ட ஜேஎன் 1 வகை கொரோனா தான் இப்போது இந்தியாவில் பேசுபொருள் ஆகியுள்ளது. ஏனென்றால் இந்த ஜேஎன் 1 வகை கொரோனா காரணமாகவே உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே நமது நாட்டில் சுகாதார வல்லுநர்களும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

 Is your vaccine effective against the new variant Coronavirus JN 1

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கேரளாவின் காரகுளத்தைச் சேர்ந்த 79 வயதுப் பெண்ணுக்கு இந்த வகை கொரோனா உறுதியானது. ஜேஎன்1 வகை கொரோனாஎன்பது பிரோலா என்றும் அழைக்கப்படும் பிஏ.2.86 ஓமிக்ரான் கொரோனா உடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

கொரோனா: நாட்டில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த ஜேஎன் 1 கொரோனா குறித்து விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசும் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. குறிப்பாக அனைத்து வகையான இன்ஃப்ளூயன்ஸா நோய்கள், மற்றும் சுவாச நோய்கள் குறித்துத் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். மேலும், கொரோனா உறுதியாவோரிடம் மரபணு வரிசை முறை சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புது கொரோனா வகை குறித்துக் கண்காணிக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் அதைக் கண்காணிக்கவும் இந்த நடவடிக்கைகள் இது நிச்சயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜேஎன் 1 கொரோனா வகையில் புரத ஸ்பைக்கில் மாற்றம் இருக்கிறதாம். நமது வேக்சின்கள் இந்த புரத ஸ்பைக்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட நிலையில், புது வகை கொரோனாவுக்கு எதிராக வேக்சின் வேலை செய்யுமா என்ற சந்தேகமும் பலருக்கு வந்துள்ளது.

வேக்சின்: இதற்கு வேக்சினில் இருந்து தப்பும் ஆற்றல் இருப்பதாகவே கூறப்படும் நிலையில், இது குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஜேஎன் 1வகை தொடங்கி எந்தவொரு கொரோனாவாக இருந்தாலும் அதன் தீவிர பாதிப்பைக் குறைக்க வேக்சின் கட்டாயம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வேக்சின்கள் முக்கிய அங்கமாகும். தீவிர நோய்ப் பாதிப்பு, சுவாச பிரச்சினை, வேகமாகப் பரவுவது ஆகியவற்றை கட்டுப்படுத்த வேக்சின் முக்கியம்

இந்த ஜேஎன்1 கொரோனாவை வேக்சின்களால் அழிக்க முடிகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதேநேரம் நாம் ​​பூஸ்டர் டோஸ்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது நமது உடலுக்குச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும். மாஸ்க் போடுவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுவது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஏன் முக்கியம்: வேக்சின்கள் ஜேஎன் 1 கொரோனாவை முழுமையாகத் தடுக்கும் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இது தீவிர பாதிப்பைக் குறைக்கிறது. இதன் மூலம் உயிரிழப்பு குறையும்" என்கிறார்கள். ஏற்கனவே இரண்டு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் அதில் இருந்து நல்ல பாதுகாப்பைப் பெறுவார்கள். இணை நோய் உள்ளவர்கள் இப்போது பூஸ்டர் டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்வது சரியான ஒன்றாக இருக்கும்.

காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. மேலும், இந்த புது வகை கொரோனா மற்ற வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவுகிறது என்பதற்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை. இது மற்ற வேரியண்ட்களை காட்டிலும் வேகமாகப் பரவினாலும் அதன் அறிகுறிகள் லேசாகவே இருக்கிறது. மேலும், இதனால் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கையும் பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+