ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்த தம்பதி கைது..டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக பகீர் தகவல்
டெல்லி: ஜாமியா நகரில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஒரு தம்பதியரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த மாதம் சிஏஏவுக்கு எதிராக மற்றும் ஆதரவானோர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்தது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பலரையும் டெல்லி போலீசார்இதுவரை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி ஜாமியாவில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஜகன்ஜெப் சாமி மற்றும் ஹீனா பஷி பெக் ஆகிய தம்பதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா கூறுகையில், ஓஹ்க்லாவின் ஜாமியா நகரில் இருந்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன தொடர்புடைய ஜஹான்ஜீப் சாமி மற்றும் ஹினா பஷீர் பேக் தம்பதியினர் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினர் " என்றார்.
தற்போது முதற்கட்ட விசாரணையில் இந்த ஜோடி ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.கே உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தது மற்றும் தேசிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. தெரிய வந்துள்ளது. ஐ.எஸ்.கே.பி ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பாகும்.
சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய முழுவதும் போராடுமாறு இந்திய முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சிஏஏவுக்கு எதிரான தனது திட்டமிட்ட வன்முறைக்காக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்ய ஜஹான்ஜீப் சாமி முயற்சித்திருக்கிறாராம். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.எஸ் பத்திரிகையான சாவ் அல்-ஹிந்த் '(வாய்ஸ் ஆஃப் இந்தியா) பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஜஹான்ஜீப் சாமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான கட்டாப் உண்மையில் அப்துல்லா பாசித் என்பதும் அவர் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான வழக்குகளில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications