தேதி குறித்த இஸ்ரோ.. விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்போகும் இந்தியா.. திரும்பும் உலக நாடுகள்
டெல்லி: ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், விண்வெளியில் வரும் 2028ம் ஆண்டு ஆய்வு மையத்தை இந்தியா அமைக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
இந்தியாவின் சார்பில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விண்வெளிக்கு செல்லும் வீரர்களையும் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டில் விண்வெளியில் இந்தியா தனக்கென சொந்தமாக ஆய்வு மையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்த ஆய்வு மையம் 'பாரதிய அந்தரிஷ்' என்கிற பெயரில் அழைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி: நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த விண்கலமும் தரையிறங்கியது கிடையாது. இப்படி இருக்கையில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆண்டு இங்கு தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்திருந்தது. சர்வதேச நாடுகளும் இந்த வெற்றிக்காக இந்தியாவை வெகுவாக பாராட்டியிருந்தன.
ஆதித்யா எல்1: சந்திரயான் வெற்றியை தொடர்ந்து ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது. சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னர் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் இப்படியான விண்கலனை ஏவியிருந்தது. ஆனால், முதன் முறையாக இந்தியா இப்படிப்பட்ட விண்கலத்தை ஏவியிருப்பது உலக நாடுகளின் கவனத்தையை தன் பக்கம் திருப்பியிருந்தது.
எக்ஸ்போசாட்: சந்திரயான், ஆதித்யாவை தொடர்ந்து கருந்துளைகளை ஆய்வு செய்ய இந்தியா எக்ஸ்போசாட் என்றும் செயற்கைக்கோளை அனுப்பியது. விண்வெளி துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் நாடுகளே கருந்துளை குறித்து ஆய்வு செய்ய திணறி வரும் நிலையில், இந்தியா இதற்காக ஒரு செயற்கைக்கோளை அனுப்பியிருந்தது, மற்ற நாடுகளுக்கிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தியா சார்பில் வரும் 2028ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications