"நோ சான்ஸ்.." சந்திரயான் 3 ரோவரை எழுப்ப முடியுமா.. வந்து விழுந்த கேள்வி.. Ex இஸ்ரோ தலைவர் பரபர
டெல்லி: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 ரோவரை மீண்டும் எழுப்ப முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ்.கிரண் குமார் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நூற்றாண்டில் விண்வெளி துறையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே தான் போட்டி நிலவியது. ஆனால், இப்போது இந்தியாவும் விண்வெளி துறையில் தொடர்ந்து பல சாதனைகளைச் செய்து வருகிறது.

குறைந்த செலவில் உலகமே வியக்கும் வகையில் இஸ்ரோ தொடர்ச்சியாக இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்தான் நிலவு குறித்த ஆய்வுகளுக்கு இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது.
தென் துருவம்: சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற பெயரையும் அது பெற்றது. நிலவில் பல்வேறு இடங்களுக்கு சென்ற சந்திரயானின் ரோவர் பல கட்ட ஆய்வுகளைச் செய்தது. அங்கு மொத்தம் 14 நாட்களுக்கு நிலவில் சந்திரயான் ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவில் அதன் இரவு காலம் வந்ததால் அது ஸ்லீப் மோடிற்கு சென்றது.
தொடர்ந்து கடந்த செப். இறுதியில் ரோவரை எழுப்பும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அது வெற்றிகரமாக இருக்கவில்லை. இருப்பினும், ரோவரை எழுப்பும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கும் என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போதைய சூழலில் சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவரை எழுப்ப முடியும் என்று நம்பிக்கை இல்லை என்று ஆராய்ச்சியாளர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
நோ சான்ஸ்: இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ்.கிரண் குமார் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இல்லை, அவ்வளவுதான்.. ரோவர் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை. ரோவர் கருவியால் புத்துயிர் பெற முடியுமானால் அது ஏற்கனவே நடந்திருக்க வேண்டும். தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆக. 23ஆம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனாவுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய 4ஆவது நாடு என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது.
முழு வெற்றி: சந்திரயான் 3 ரோவரை எழுப்ப முடியவில்லை என்றாலும் கூட.. அது தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பதே உண்மை. சந்திரயான்-3 சாட்டிலைட்டிற்கு இரண்டு விஷயங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. முதலில் சந்திரன் மேற்பரப்பில் பாதுகாப்பாகத் தரையிறங்க வேண்டும். அடுத்து அங்கே ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் இஸ்ரோ சிறப்பாகவே செய்துள்ளது.
அடுத்த திட்டம்: தொடர்ந்து சந்திரயான் 3 செய்த சாதனைகள் குறித்துப் பேசிய இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ்.கிரண் குமார், "இதில் நாம் சாதித்த முக்கிய விஷயம்.. வேறு யாரும் செல்லாத ஒரு பகுதியில் (தென் துருவம்) வெற்றிகரமாக அடைந்து.. அங்கிருந்து முக்கிய டேட்டாக்களை எடுத்துள்ளோம். அங்கு நமக்கு பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த குறிப்பிட்ட பகுதியின் தன்மை என்ன என்பது குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
அடுத்து நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வரும் முயற்சியை இஸ்ரோ செய்யலாம். இது எப்போது மேற்கொள்ளப்படும் என எனக்குத் தெரியாது.. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயமாக இதுவே பிரதான திட்டமாக இருக்கும். நிலவில் நம்மால் வெற்றிகரமாகத் தரையிறங்க முடிகிறது என்றால் நிச்சயம் அங்கிருந்து மாதிரிகளையும் சேகரித்து வர முடியும். இதை நோக்கிய இஸ்ரோ பயணிக்கும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications