டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் எம்பி சொன்ன ஒரு வார்த்தை.. ஷாக்கான சோனியா காந்தி.. காஷ்மீரில் விவாதத்தில் பரபரப்பு!

370 சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் அவைத் தலைவர் எம்பி அதீர் ரஞ்சன் சவுத்திரி லோக்சபாவில் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் எம்பி சொன்ன வார்த்தை.. அதிர்ந்த சோனியா!

    டெல்லி: 370 சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் அவைத் தலைவர் எம்பி அதீர் ரஞ்சன் சவுத்திரி லோக்சபாவில் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது லோக்சபாவில் இந்த மசோதா மீது விவாதம் நடந்து வருகிறது.

    மசோதா மீதான அறிமுக உரையை அமித் ஷா நிகழ்த்திய பின் அதன் மீதான விவாதம் நடைபெற்றது, திமுக , காங்கிரஸ் கட்சிகள் லோக்சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது. காங்கிரஸ் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக பேசி வருகிறது.

    என்ன விவாதம்

    என்ன விவாதம்

    இந்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக காங்கிரஸ் லோக்சபா அவைத் தலைவர் எம்பி அதீர் ரஞ்சன் சவுத்திரி பேசினார். அவரின் பேச்சுதான் சர்ச்சை ஆகியுள்ளது. அவர், காஷ்மீர் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை கிடையாது. அது எப்போதும் உள்நாட்டு பிரச்சனையாக இருந்தது கிடையாது. நீங்கள்தான் அதை உள்நாட்டு பிரச்சனை என்கிறீர்கள்.

    ஐநா பதில்

    ஐநா பதில்

    காஷ்மீர் பிரச்சனை 1948ல் இருந்தே ஐநா சபையால் கவனிக்கப்பட்டு வருகிறது. அது உள்நாட்டு பிரச்சனையா உங்களுக்கு? நாம் சிம்லா ஒப்பந்தம், லாகூர் நிலைப்பாடு எடுத்து இருக்கிறோம். இது இரண்டு நாட்டு பிரச்சனை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி நீங்கள் நினைத்து பார்த்தீர்களா?

    பிரச்சனை

    பிரச்சனை

    இது எப்படி உள்நாட்டு பிரச்சனை ஆகும் என்று எங்களுக்கு நீங்களே விளக்குங்கள். காங்கிரஸ் எம்பிக்களுக்கு நீங்களே விளக்கினால் நன்றாக இருக்கும், என்று கேட்டார். அதீர் ரஞ்சன் சவுத்திரி இப்படி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதை தற்போது பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    ஏன் சர்ச்சை

    ஏன் சர்ச்சை

    அதீர் ரஞ்சன் சவுத்திரி எப்படி காஷ்மீர் பிரச்சனையை உள்நாட்டு பிரச்சனை இல்லை என்று கூறினார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. அவர் என்ன பாகிஸ்தான் நாட்டிற்காக பேசுகிறாரா? அவர் எப்படி இப்படி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசலாம். காஷ்மீர் எப்போது வெளிநாடாக மாறியது என்று பலர் கேட்டு இருக்கிறார்கள்.

    சோனியா

    இந்த பேச்சை கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் தலைவருமான சோனியா காந்தியே அதிர்ச்சி அடைந்தார். இவர் என்ன இப்படி பேசுகிறார். இது நம் கொள்கை கிடையாதே, என்று அவரே குழம்பிப் போனார். ராகுல் காந்தியை திரும்பி பார்த்த சோனியா காந்தி அதிர்ச்சியோடு கொடுத்த ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    English summary
    It is not an internal matter says Congress MP Adhir Ranjan Chowdhury, Sonia Gandhi Shocked - Video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X