"என்னால் தாங்கவே முடியல.." கதறி அழுத சன்னி லியோன்.. மும்பையில் அன்று என்ன நடந்தது..! பரபர பேச்சு
டெல்லி: இந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் சன்னி லியோன் இந்தாண்டு தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாலிவுட்டை கலக்கி வரும் நடிகை சன்னி லியோன். இந்தி சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இவர் வலம் வருகிறார். இவருக்குப் பாலிவுட்டை தாண்டியும் ரசிகர்கள் கொட்டி கிடக்கிறார்கள்.

கடந்த 2011இல் முதலில் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்ட அவர், அதன் பிறகு தொடர்ச்சியாக ஆண்டுக்குப் பல படங்களில் நடித்து வருகிறார்.. ஓ மை கோஸ்ட் என்ற தமிழ்ப் படத்திலும் கூட சன்னி லியோன் நடித்துள்ளார்.
சன்னி லியோன்: இவர் தனது கவர்ச்சியான ஆடைகள், துணிச்சலான கேரக்டர்களுக்காக தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருவார். இவர் கடைசியாக அனுராக் காஷ்யப்பின் கென்னடி படத்தில் சார்லி என்ற ரோலில் நடித்திருந்தார். இப்போது இவர் இந்தி, தமிழ் எனப் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில், தான் ஒரு விஷயத்திற்காக மும்பை வந்த பிறகு மிக மோசமாக பீல் செய்து அழுததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கொட்டி தீர்த்த கனமழையால் தான் மூன்று சொகுசு கார்களை இழந்ததாகவும் அதிலும் ஒரே நாளில் இரண்டு சொகுசு கார்களை இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த போது கட்டுப்படுத்தவே முடியாமல் கண்ணீர் கொட்டியதாகவும் அவர் தெரிவித்தார். கண் முன்னால் கார்கள் அடித்துச் செல்வதைப் பார்க்கும் போது கொடூரமாக இருந்ததாகவும் அதைப் பார்த்த போது கண்ணீர் விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்குள் இதை இறக்குமதி செய்யத் தான் மிகப் பெரியளவில் வரியைச் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனம் விட்டு பேசினார்: இப்படி மழையால் தான் இழந்த கார்களில் ஒன்று எட்டு இருக்கைகள் கொண்ட மெர்சிடிஸ் கார் என்று சன்னி லியோன் தெரிவித்தார். இது குறித்து அவர் அவர் மேலும் கூறுகையில், "என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. நான் அப்போது மகிழ்ச்சியாக இல்லை.. ஆனால், இதையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது எனக்குப் புரிகிறது. நல்ல வேலை இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நான் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான ஒரு காரை ஓட்டி வருகிறேன். இது இங்குள்ள மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. நான் தவறான காரை வாங்கி இறக்குமதி செய்தேன் என்று சொல்வதே சரியாக இருக்கும். இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களையே நான் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளேன்.
நான் ஆரம்பத்தில் இந்தியா வந்தபோது.. மும்பையில் கடலுக்கு அருகில் ஒரு வீட்டில் வசித்து வந்தேன்.. அப்போது பருவமழை காலத்தில் வீட்டின் சுவர்களில் தண்ணீர் கசியும்.. எங்குப் பார்த்தாலும் ஈரமாக இருக்கும். ஆனாலும் எனக்கு மழைக்காலம் ரொம்பவே பிடிக்கும். கொஞ்சம் குளிராக இருந்தாலும் ஓகே தான். மழை பெய்யத் தொடங்கினாலே நான் குஷியாகிவிடுவேன்.
சொகுசு கார்கள்: ஆனால், இந்தாண்டு மழைக் காலம் மகிழ்ச்சியானதாக இல்லை.. நான் ஒரே நாளில் இரண்டு நல்ல கார்களை மழையால் இழந்துவிட்டேன். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இந்தியாவில் நீங்கள் கார்களை இறக்குமதி செய்யும் போது அதிகமாக வரி செலுத்த வேம்டி இருக்கும். அப்படி அதிக வரி கொடுத்து இறக்குமதி செய்த காரை தான் மழையில் இழந்துவிட்டேன்.. நான் கதறி அழுதுவிட்டேன். ஆனாலும் பரவாயில்லை இவை நடக்கவே செய்யும்" என்று அவர் கூறியுள்ளார்.
சன்னி லியோனின் இந்தப் பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாகப் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதில் இருந்து பெரும் பணக்காரர்கள் தொடங்கி யாருமே தப்புவதில்லை என்பதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications