டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் சகோதர சகோதரிகளே.. நாளைய பொழுதுகள் புதிய விடியலுடன் உங்களுக்காக காத்திருக்கு.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மசோதா நாடாளுமன்றத்தில் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் புதிய விடியலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சாசன பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை சட்டமாக நிறைவேற்றும் வகையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று (செவ்வாய்கிழமை) லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

J&K is now free from their shackles. A new dawn, better tomorrow awaits: says pm modi

இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 70 ஆண்டு வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. அத்தோடு ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் மாறுகிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் காஷ்மீர் மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாம் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாக எழுந்து 130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியமான சந்தர்ப்பத்தில். காஷ்மீர் தொடர்பான முககிய மசோதாக்கள் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

லடாக் மக்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டகால கோரிக்கை இப்போத நிறைவேற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு லடாக் பிராந்தியத்தின் செழிப்புக்கு உத்வேகம் அளிக்கும் அத்துடன் சிறந்த வளர்ச்சி வசதிகளை உறுதி செய்யும்.

காஷ்மீர் விவகாரம்.. அரசின் முடிவு.. நல்லதா கெட்டதா..வரலாறு முடிவு செய்யும்..அமித் ஷா பரபரப்பு பேச்சு காஷ்மீர் விவகாரம்.. அரசின் முடிவு.. நல்லதா கெட்டதா..வரலாறு முடிவு செய்யும்..அமித் ஷா பரபரப்பு பேச்சு

தைரியத்துடனும், பின்னடைவுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் என் சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக உணர்ச்சி பூர்வமாக உங்களை மிரட்டியவர்கள் ஒருபோதும மக்களின் அதிகாரம் குறித்து அக்கறைப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் அவர்களிடம் இருந்து இப்போது விடுபட்டுள்ளது. நாளைய சிறந்த பொழுதுகள் (எதிர்காலம்) ஒரு புதிய விடியலுடன் உங்களுக்காக காத்திருக்கிறது" இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
pm modi: I salute my sisters and brothers of Jammu, Kashmir, & Ladakh for their courage & resilience.For years, vested interest groups who believed in emotional blackmail never cared for people’s empowerment. J&K is now free from their shackles. A new dawn, better tomorrow awaits
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X