வக்பு மசோதா..சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்- நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க ஜெகன் கட்சி முடிவு!
டெல்லி: ஆந்திராவில் ஆட்சியில் இருந்தவரை மத்திய அரசின் அத்தனை மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் ஆதரித்தது ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். ஆனால் ஆந்திரா சட்டசபை, லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்க, மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய மசோதா உள்ளிட்டவைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்க முடிவு செய்துள்ளது. இது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
ஆந்திராவில் முஸ்லிம்கள் 9% உள்ளனர். முஸ்லிம்கள் வாக்குகள் கடந்த காலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு கிடைத்து வந்தது. ஆனால் ஆந்திரா சட்டசபை, லோக்சபா தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்தது. இதனால் இரு தேர்தல்களிலும் வரலாறு காணாத பெரும் தோல்வியை எதிர்கொண்டது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போது, பாஜகவை கடுமையாக எதிர்க்கவில்லை. மத்திய பாஜக அரசுடன் நல்லுறவை கொண்டிருந்தது. இதனாலேயே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இணையவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாக்களை கண்ணை மூடிக் கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரித்தும் வந்தது.
ஆந்திரா தேர்தல்கள் தோல்விக்குப் பின்னர் பாடம் கற்றுக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜகவை கடுமையாக எதிர்க்க முடிவு செய்திருக்கிறது. இதனால் நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவைகளை இந்தியா கூட்டணியுடன் இணைந்து எதிர்க்கவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் இந்த முடிவு ஆந்திரா அரசியலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்க் நெருக்கடியை உருவாக்கக் கூடும். இத்தகைய முடிவின் மூலமாக தெலுங்கு தேசம் கட்சி பக்கம் திரும்பிய முஸ்லிம் வாக்குகளை மீண்டும் தங்களது வசமாக்க முடியும் என்பதுதான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications