"ஆபரேஷன் சிந்தூர்".. பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜேஎம்எம் கட்சியின் பெண் எம்பி.. ஏன்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு நம் நாடு பதிலடி தாக்குதல் கொடுத்துள்ளது. இந்த பதிலடி நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் கணவரை இழந்த பெண்களை குறிக்கும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்ட நிலையில் அதனை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பெண் எம்பி மஹுவா மாஜி விரும்பாத நிலையில் பிரதமர் மோடி வேறு கணக்கு போட்டு இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

jharkhand-mukti-morcha-mp-mahua-majhi-objects-to-name-of-operation-sindoor

நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 25 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடந்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் வைக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டும் சிதைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் இந்த துல்லிய தாக்குதலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் நம் நாடு நடத்திய பதிலடி தாக்குதலுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் வைத்திருப்பதை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பி மஹுவா மாஜி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: நமது நாட்டின் சுயமரியாதையை பாதுகாப்பதற்கான இந்த தாக்குதல் நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும் மத நல்லிணக்கத்தைப் பேணுமாறு நாட்டு மக்களிடம் நான் கேட்டு கொள்கிறேன்.

இரு நாடுகளும் பொதுமக்களை தாக்கக்கூடாது. அப்படி நடந்தால் இந்த தாக்குதல் வேறு திசையில் செல்லக்கூடும். அணு ஆயுதப் போர் தொடங்கினால் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு விளைவிக்கும். எனவே நாம் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்காக இந்த பெயர் (ஆபரேஷன் சிந்தூர்) தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் இந்த பெயரை தேர்வு செய்ததன் பின்னணியில் சில அரசியல் உள்ளது'' என்றார்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்திருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுவாக நம் நாட்டை எடுத்து கொண்டால் திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பார்கள். கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் 25 பேர் இந்தியர்கள். ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதோடு பலியான 26 பேரும் ஆண்கள் ஆவார்கள். அவர்களை அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்முன்னே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

தங்களின் கணவர் இல்லாத உலகில் வாழ விரும்பவில்லை என்று பெண்கள் தங்களை துப்பாக்கியால் சுட்டு கொல்லும்படி பயங்கரவாதிகளிடம் கூறினர். ஆனால் பயங்கரவாதிகள் பெண்களை சுடவில்லை. ஆண்களை மட்டுமே சுட்டு கொன்றனர். இந்நிலையில் தான் கணவர் பலியானதால் பல பெண்களின் குங்குமத்தை இழக்க காரணமாக இருந்த பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கான பதிலடிக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் வைக்கப்பட்டது. சிந்தூர் எனும் ஆங்கில வார்த்தைக்கு தமிழில் குங்குமம் என்பது பொருள். இதன்மூலம் இந்துக்களின் வாக்கு வங்கியை பிரதமர் மோடி குறிவைக்கலாம் என்பதை தான் மறைமுகமாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பி மஹுவா மாஜி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+