வக்பு மசோதா- நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கடும் விவாதம்- திமுக ஆ.ராசா உட்பட 10 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
டெல்லி: மத்திய அரசின் வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இன்று மிக கடுமையான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஈடுபட்டதற்காக திமுகவின் ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சிகளின் 10 எம்.பிக்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி வக்ஃப் வாரியம் (வக்பு) தொடர்பாக இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, இது வக்ஃப் வாரியத்தின் பணியை சீரமைக்கும் மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அறிமுக நிலையிலேயே திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து வக்பு மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஜகதாம்பிகா பால் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் கடைசி ஆலோசனைக் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இந்த குழுவில் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பை மீறி இன்றே நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டங்களை அவசரம் அவசரமாக நிறைவு செய்து அறிக்கையைப் பெறுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே திருத்தப்பட்ட வக்பு மசோதாவை தாக்கல் செய்வதும் மத்திய அரசின் திட்டம் என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திமுகவின் ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சிகளின் 10 எம்.பிக்கள் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications