Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்டுவைத்த பாஜக.. இனி வார்த்தையில் கவனமாக இருப்பேன்.. கங்கனா ரனாவத்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தெரிவித்த கருத்துக்கு பாஜகவினரே கடுமையாக கண்டனத்தை தெரிவித்த நிலையில், இனி தனது வார்த்தையில் மிகவும் கவனமாக இருப்பேன் என்று எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர்போனவர். இவர் எது பேசினாலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதே வழக்கம். கடந்த வாரம் காங்கிரஸ் ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரித்து படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட்டில் யாருக்கும் மூளையே இல்லை. அவர்களுடன் நான் பழகுவதே இல்லை என்று கூறியிருந்தார்.

kangana ranaut bjp

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் கங்கனா. ஏற்கெனவே இவர் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிய வழக்கில் சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியர் பளார் என்று அறை விட்டிருந்தார். இருந்தபோதும் கங்கனா திருந்தவில்லை.

அதைத்தொடர்ந்து, இந்த வாரம் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மீண்டும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதுகுறித்து தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுகையில், "பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்தன. அதிர்ஷ்டவசமாக மத்திய அரசும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் வைத்திருந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இல்லையென்றால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். பஞ்சாப்பில் நடைபெற்ற அதே சூழ்நிலை இங்கும் நடந்திருக்கும். வெளிநாட்டில் இருந்து இதற்கான சதித்திட்டம் நடந்தன. நாடு யாரின் கைகளில் சென்றாலும் அதைப்பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.

விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த நாடு அறியாது. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது." என்று கூறியிருந்தார்.

இதனை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவினரை அவரைக் கண்டிக்க தொடங்கினர். முக்கியமாக பஞ்சாப் மாநில பாஜக மூத்தத் தலைவர் ஹர்ஜித் கரேவல் கங்கனாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மதம், விவசாயிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கங்கனா கருத்து சொல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது என்று கூறியிருந்தார். மேலும், கங்கனாவுக்கு பாஜக சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விசாயிகள் சர்ச்சை கருத்து தொடர்பாக கங்கனா ரனாவத் தற்போது பேசியுள்ளார். அவர் கூறியதாவது: இனி என்னுடைய வார்த்தைகளில் நான் கவனமாக இருப்பேன். கட்சியின் கொள்கைகளின்படி இயங்குவேன். பாஜகவுக்கு தனிநபர்களைவிட தேசம்தான் முக்கியம். விவசாயிகள் தொடர்பான சர்ச்சைக் கருத்துக்கு கட்சித் தலைமை என்னை கண்டித்தது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+