கருப்பு + சிவப்பு புடவையில்.. அட யாருன்னு பாருங்க.. பாரத் ஜோடோ யாத்திரையில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லிக்குள் நுழைய உள்ள நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் யாத்திரை மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார். இதனால் யாத்திரையும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி
தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார். தற்போது இந்த யாத்திரைக்கு மக்கள் தரும் ஆதரவும் அதிகரித்து உள்ளது. கட்சி சாராத பொதுமக்கள் பலர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டு உள்ளனர். தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர். முக்கியமாக கர்நாடகாவில் இந்த யாத்திரையில் தினம் தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் சேர்ந்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இதுவரை நடத்தப்படாத மிகப்பெரிய யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது.

யாத்திரை
3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்படுகிறது . இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே சென்று கொண்டு இருக்கிறார். தற்போது 100 நாட்களை கடந்து இந்த யாத்திரை சென்று கொண்டு இருக்கிறது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இந்த யாத்திரை தற்போது டெல்லியில் இணைய உள்ளது. இன்று பரிதாபாத் சென்ற ராகுல் காந்தி.. இன்று மாலை டெல்லி எல்லைக்கு அருகே வருவார். அதன்பின் நாளை மாலைக்குள் இவர் டெல்லிக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லிக்குள் நுழைய உள்ள நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார். ராகுல் காந்தியுடன் கனிமொழி யாத்திரையில் கலந்து கொண்டு ஒன்றாக நடந்தார். ராகுலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்து சென்றார். கனிமொழி திமுகவின் வண்ணமான கருப்பு சிவப்பு உடையில் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் பேசியபடி இவர் இந்த பயணத்தில் கலந்து கொண்டார். இவர்கள் அங்கே இருந்த மக்களிடமும் பேசி குறைகளை கேட்டறிந்தனர்.

கமல்ஹாசன்
இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளார். 100வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைய உள்ளது. இதில் 24ம் தேதி கமல்ஹாசன் டெல்லியில் கலந்து கொள்ள இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.இதற்காக பெரிய அணியை கமல்ஹாசன் தேர்வு செய்து வருகிறார். பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்று பலரை அடங்கிய 500 பேர் கொண்ட குழுவை இதற்காக கமல்ஹாசன் இறக்க உள்ளாராம். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் இவர்களை கமல்ஹாசன் தேர்வு செய்ய இருக்கிறாராம். இவர்களை டெல்லிக்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகும் விதமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications