வறுமையை ஒழிச்சிட்டீங்க- பட்டினி குறியீட்டில் 101-வது இடம்...வாழ்த்துகள் மோடிஜி... கபில் சிபல் கிண்டல்
டெல்லி: சர்வதேச பட்டினி குறியீட்டு வரிசையில் இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது; ஆகையால் வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கிண்டலடித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியின் ஹங்கர் ஹில்ப் ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளின் பட்டினிக் குறியீடு குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டினி, ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 107 நாடுகளின் ஒப்பீட்டு பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. தற்போது 116 நாடுகளின் ஒப்பீட்டு பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்கு சரிந்திருக்கிறது.
அதாவது பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியா பட்டினி குறியீட்டு பட்டியலில் பின்தங்கி இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவை விட பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ, மொசாம்பிக், சோமாலியா உள்ளிட்ட பல நாடுகள் பின்தங்கி இருக்கின்றன. குழந்தைகளுக்கு சத்துணவு, சரிவிகித உணவு ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக சர்வதேச பட்டினிக் குறியீட்டில் நேபாளம், வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்கு முந்தைய பட்டியலில் உள்ளன.

இந்த பட்டியலை முன்வைத்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இந்த பட்டியலை சுட்டிக்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டலடித்துள்ளார். கபில் சிபல் தமது பதிவில், வறுமை, பட்டினி, சர்வதேச வல்லரசு, டிஜிட்டல் இந்தியா என பலவற்றை ஒழித்துவிட்டீர்கள் பிரதமர் மோடி ஜி.. உங்களுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 2020-ல் பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 94 வது இடம்; 2021-ல் இந்தியா 101வது இடம் பெற்றுள்ளது என்பதையும் பதிவிட்டுள்ளார். அத்துடன் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பின்னால் இருக்கிறது இந்தியா என குறிப்பிட்டுள்ளார் கபில் சிபல். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications