இந்திய தாக்குதலால்.. எங்க ஹார்பருக்கு பலத்த சேதம்.. "டெலிட்" ஆன கராச்சி துறைமுக அறக்கட்டளை போஸ்ட்!
டெல்லி:இந்தியா நடத்திய இராணுவத் தாக்குதல்களால் கராச்சி துறைமுகம் சேதமடைந்துள்ளதாக கராச்சி துறைமுக அறக்கட்டளை (KPT) தெரிவித்துள்ளது. X பக்கத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் தாக்குதல் கராச்சி துறைமுகத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும், இதன் விளைவாக ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு ஏற்பட்டதாகவும் KPT தெரிவித்து இருந்தது. ஆனால் பின்னர் இந்த போஸ்ட் டெலிட் செய்யப்பட்டுவிட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையும் களத்தில் இறங்கி தாக்கியதாக நேற்று செய்திகள் வந்தன. கடற்படை சார்பாக கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கியதாக செய்திகள் வந்தன. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் கராச்சி துறைமுக அறக்கட்டளை மேற்கண்ட போஸ்டை செய்துள்ளது.
பாகிஸ்தானின் ஏற்றுமதி இறக்குமதி கராச்சியில் நடக்கும் நிலையில் அங்கே தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை கராச்சி துறைமுகம் பாகிஸ்தானின் மிக முக்கிய பொருளாதார தளம் ஆகும். கராச்சி துறைமுகம்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கே 1971ல் நடந்த போரின் போது இந்தியா தாக்கியது.
கராச்சி துறைமுகம் பாகிஸ்தானின் நரம்பு போன்றது. அதை இந்தியன் நேவி தாக்கி உள்ளது. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் அரேபியன் கடலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லாகூர் தாக்குதல்
ஏற்கனவே பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல் உள்ளிட்டோருடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் தாக்குதலையடுத்து மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் சியால்கோட்டில் இந்தியா தாக்கி வருகிறது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.












Click it and Unblock the Notifications