Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசுவாசம் கொடுத்த மணீஷ் சிசோடியா.. ஆறுதலுக்காக காத்திருக்கும் கவிதா! ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இதே வழக்கில் கைதாகியுள்ள கவிதாவின் ஜாமீன் மனு மீது, இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை ஸ்கிப் செய்திருந்தார்.

Kavitha Enforcement Directorate Supreme Court


இதையடுத்து கடந்த மார்ச் 15ம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கவிதாவின் கைது சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

முதலில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கவிதா, பின்னர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திஹார் சிறையில் இருக்கும்போதே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கவிதாவை கைது செய்தது. பின்னர், 3 நாட்கள் விசாரணைக்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இந்த அனுமதியையடுத்து கவிதா சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தனக்கு ஜாமீன் கேட்டு கவிதா தாக்கல் செய்திருந்த மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் இப்போது ஜாமீன் வழங்கினால் அது பொருத்தமாக இருக்காது என்று கூறி, கடந்த ஜூலை 1ம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இன்று நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், தனக்கும் ஜாமீன் கிடைக்கும் என கவிதா எதிர்பார்த்திருக்கிறார்.

பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.

இதில் ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் மூலம் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலுக்கு செலவிட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் கவிதாவின் பங்கு முக்கியமானது என அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+