Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து! “விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” - கெஜ்ரிவால் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு அமெரிக்கா 50% அளவுக்கு வரியை விதித்திருந்தது. இது மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கி இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருக்கிறார்.

90-95% விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் இழைத்து வருவதாக விமர்சித்திருக்கும் கெஜ்ரிவால், இந்த உண்மை வெளியே தெரியும்போது விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

Kejriwal cotton US

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்திக்கு 11% வரி விதிக்கப்பட்டிருந்ததால், அது இந்திய பருத்தியை விட காஸ்ட்லியாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வரியை மத்திய அரசு ரத்து செய்திருப்பதால், இந்திய பருத்தியை விட அது கிலோவுக்கு ரூ.15-20 வரை விலை குறைவாக விற்பனையாகும். இதனால், இந்திய விவசாயிகள் தலையில் துண்டை போட்டுக்கொண்டுதான் போக வேண்டும். கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கும் சில முடிவுகளை ரகசியமாக எடுத்துள்ளார். இது குறித்து 90 முதல் 95% விவசாயிகளுக்கு இன்னும் தெரியாது.

இந்த முடிவுகள் அமல்படுத்தப்படும்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. டிரம்பின் அழுத்தம் காரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்பட்ட 11% வரியை மோடி அரசு நீக்கியுள்ளது. ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை 40 நாட்களுக்கு அமெரிக்கப் பருத்திக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. இந்த காலத்தில் இந்திய விவசாயிகள் தங்கள் பருத்தியை எங்கு கொண்டு விற்பனை செய்வார்கள்? இந்திய ஜவுளித் தொழில்துறை செப்டம்பர் 30 வரை அமெரிக்கப் பருத்தியை மட்டுமே வாங்கும்.

சரி செப். 30க்கு பிறகு இந்திய விவசாயிகளின் பருத்தி நியாயமான விலைக்கு விற்கப்படுமா? என்று கேட்டால் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அக்.1ம் தேதி முதல் இந்திய விவசாயிகள் தங்கள் பருத்தியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்படுவார்கள். இது சொந்த நாட்டு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

ஜூலை மாதத்தில், நம்மூர் விவசாயிகள் கடன் வாங்கிப் பருத்தி பயிரிட்டனர். அக்டோபரில் அவர்களின் பருத்தி சந்தைக்கு வரும். ஆனால், செப்டம்பர் 30 வரை ஜவுளித் தொழில்துறை மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கியிருக்கும். ஜவுளி துறைக்கு நம்மூர் பருத்தி தேவையில்லை. இது நம் நாட்டு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்" என்று கூறியிருக்கிறார்.

இந்திய ஜவுளித் துறைக்குப் பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பருத்தி இறக்குமதி வரியை மத்திய அரசு தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஆனால் இந்த விலக்கு டிச.31 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய பருத்தி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்க்கட்சியில் ஒரு பிரிவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் உற்பத்தி செலவுகளை குறைக்கவே பருத்தி மீதான வரியை ரத்து செய்திருப்பதாக மற்றொரு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+