“தமிழே” தெரியாமல் விமர்சனம்? குஷ்பு VS விக்ரமன்.. ஆ.ராசா பேச்சு பற்றி அனல் பறந்த ஆங்கில டிவி விவாதம்
டெல்லி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி பேசியது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் நடைபெற்ற விவாதத்தில் தனித்துவத்துக்கு தவறான அர்த்தம் சொன்ன பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விக்ரமன் சரியான விளக்கத்தை அளித்தார்.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னா மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

ஆ.ராசா பேச்சு
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

தனித் தமிழ்நாடு
விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அண்ணாமலை
இந்த வீடியோ பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாட்டில் அரசியல் பேச்சுகள் இந்த நிலையில் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. யாரையோ திருப்திப்படுத்துவதற்காக திமுக எம்பி மீண்டும் ஒரு சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை கக்கியுள்ளார்.

ஆங்கில டிவி விவாதம்
இந்த நிலையில் ஆ.ராசா இந்து மதத்தை அவமதித்துவிட்டதாகவும், தனி நாடு கேட்பதாகவும் தலைப்பிட்டு ரிபப்ளிக் ஆங்கில தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது. அர்னாப் கோஸ்வாமி நெறியாளுகை செய்த இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன், பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.

குஷ்பு VS விக்ரமன்
அப்போது தனித் தமிழ்நாடு கோரியதாக குஷ்பு கூற, குறிக்கிட்ட விக்ரமன், "நீங்கள் தமிழை புரிந்துகொள்ளாமல் உங்களுக்கு தோன்றியதை மொழி பெயர்க்கிறீர்கள்." என்றவுடன், குஷ்பு "எனக்கு தமிழ் தெரியும். உங்கள் தலைவர் என்ன சொன்னார் என்று தெரியும்." என்று கூறினார். அதற்கு விக்ரமனோ "உங்களுக்கு துணிச்சல் இருந்தால் இந்த வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை சொல்லுங்கள் குஷ்பு.

தனித்துவம்
தனித்துவமான தமிழ்நாடு என்று அவர் சொன்னார். இதன் அர்த்தம் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்பான குணாதிசயங்கள் உள்ளது என்பதே. அதற்கென தனியாக எல்லாம் உள்ளது. தனி கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்." என்று கூறினார். இதனால் கொந்தளித்த குஷ்பு, திமுக எப்போதுமே தனி மாநிலம் பற்றி பேசுகிறது என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications