டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜிடிபி வீழ்ச்சி.. எதிர்பார்த்ததுதான்... விரைவில் சரியாகிவிடும் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

Google Oneindia Tamil News

டெல்லி: வரலாறு காணாத வகையில் ஜிடிபி வீழ்ச்சியடைந்திருந்தாலும் அடுத்த காலாண்டில் நிலைமை சரியாகிவிடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 23.9% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தை பெரும் சரிவுக்கு கொண்டிருக்கிறது கொரோனா லாக்டவுன்.

KV Subramanians comments on GDP figures

இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன் இந்த நிலைமை குறித்து கூறியதாவது:

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. தற்போதைய முதலாம் காலாண்டு ஜிடிபி சரிவு என்பது எதிர்பார்த்த பாதையில்தான் வந்துள்ளது.

கடந்த 1870 ஆண்டுக்குப் பின் உலக நாடுகளில் ஜிடிபி இவ்வளவு மிக மோசமான பாதிப்பை இப்போதுதான் சந்தித்துள்ளது. பிற நாடுக்ளைப் போல முதலாம் காலாண்டில் இந்தியாவும் லாக்டவுனை அமல்படுத்தியது.

ஜிடிபி சரிவு- மோடி அரசுக்கு அவமானம்... தவறுகளை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்... ப. சிதம்பரம் 'டோஸ்'ஜிடிபி சரிவு- மோடி அரசுக்கு அவமானம்... தவறுகளை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்... ப. சிதம்பரம் 'டோஸ்'

இந்தியாவின் பொருளாதார அளவுதான் இங்கிலாந்து. இங்கிலாந்தில் 22% சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறோம். சில முக்கிய துறைகளில் ஏப்ரல் மாதம் 38% சரிவு இருந்தது. இது ஜூலையில் -9.6% ஆக உள்ளது. மே மாதத்தில் 22% சரிவில் இருந்த துறைகள் ஜூனில் 13% ஆகவும் மாறி இருக்கின்றன.

இந்தியாவில் நுகர்வு விகிதமான 27% குறைந்திருக்கிறது. இது நிச்சயமாக ஜிடிபியில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 10 ஓவர்களில் நிதானமாக விளையாடிவிட்டு அடுத்த 40 ஓவர்களில் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவிப்பதைப் போல கொரோனா லாக்டவுனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும். நிச்சயம் அடுத்த காலாண்டில் நிலைமை சீராகிவிடும்.

Recommended Video

    GDP Explained In Tamil | Oneindia Tamil

    இவ்வாறு கே.வி. சுப்பிரமணியன் கூறினார்.

    English summary
    India's Chief Economic Advisor KV Subramanian's comments on the the latest GDP figures.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X