‛மோடி பேச்சுக்கு நட்டாவுக்கு நோட்டீஸ்’.. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியா? விடாத எதிர்க்கட்சிகள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பாஜக தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேசியது மோடியாக இருக்கும் நிலையில் அவரை விட்டுவிட்டு பாஜக தலைவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

முன்னதாக தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டிருந்த மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை குறிப்பிட்டு பரப்புரை செய்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
அதாவது ராஜஸ்தான் மாநிலம் பன்ஸவாடாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன்சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார்.
இவ்வாறு அவர் பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவும், தங்களது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் விளக்கமளித்துள்ளனர்.
மட்டுமல்லாது, பிரதமரின் பேச்சு மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதில், "இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 152பி, 289, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். சென்னையிலும் சிபிஎம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாயை மூடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இன்று பிரதமர் பேச்சு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கமாக சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்டவருக்குதான் நோட்டீஸ் அனுப்பப்படும்.. ஆனால் இந்த முறை மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், நட்டாவுக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளளனர். விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மோடி. ஆனால், ஏன் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பாஜக ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுக்கு கட்சித் தலைவர்களே பொறுப்பு என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77வது பிரிவு கூறுகிறது. எனவேதான் பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications