• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆக.31 வரை இஎம்ஐ கட்டாதவர்களின் கணக்குகளை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது - உச்சநீதிமன்றம்

|

டெல்லி: இஎம்ஐ கடன் தவணை வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்ட தவறியவர்களின் கணக்குகளை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரானா நோய்த்தொற்று காரணமாக மத்திய அரசு, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தளர்வுகள் இல்லாத லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் ஸ்தம்பித்தது. பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

Loan Moratorium : Banks shouldnt declare accounts as NPAs for two months: SC

நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்களும் வாழ்வாதாரம் இன்றி உணவுக்கே, கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், கடனுக்கான இஎம்ஐ செலுத்துவது மற்றொரு பாரமாக மாறியது. இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இஎம்ஐ செலுத்துவதற்கும் வீடு, கார், உள்ளிட்ட வங்கிக்கடன்களை செலுத்துவோருக்கு மூன்று மாதம் காலநீட்டிப்பு தரப்பட்டது. அதாவது, அந்த மூன்று மாதமும் அவர்கள் கடன் செலுத்த தேவையில்லை. அதற்குப் பிறகு செலுத்த ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாத காரணத்தால் மறுபடியும் கால நீட்டிப்பு செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் ஒத்திவைப்பு சலுகை தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதே நேரத்தில் ஒத்திவைக்கப்படும் காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டி மேல் வட்டி போட்டு வங்கிகள் மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்கள் வசூலித்தன. ஏற்கனவே பண பிரச்சனையில் சிக்கியுள்ள மக்கள் வட்டியை சேர்த்து கட்ட வேண்டுமா என்று யோசித்து அதற்கு பதிலாக வழக்கம்போலவே இஎம்ஐ கட்டி விடுகிறோம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடரப்பட்டன. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியை தெரிவித்தது.

மத்திய அரசுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு ஏகப்பட்ட அதிகாரம் உள்ளது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி இஎம்ஐ தள்ளுபடி அல்லது காலக்கெடு நீட்டிப்பு மற்றும் இஎம்ஐ தொகை மீதான வட்டி வசூலிப்பதை தடை செய்வது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

வட்டிக்கு வட்டி போடும் இந்த நிலைமையை மாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்திற்குள் தனது பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது, வட்டிக்கு வட்டி போட்டு நிறுத்தப்படுவது என்பது பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

ஏற்றுமதி செய்வதற்கு முன்.. கடைசி நொடியில் தடுக்கப்பட்ட வேக்சின்.. சீனாவின் செயலால் கோபத்தில் கனடா!

வழக்கு மீண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேக்தா உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார், அதில் இஎம்ஐ கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் நீடிக்க முடியும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் வட்டி மீது வட்டி போடும் நடைமுறைக்கு உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வட்டிக்கு வட்டி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உரிமை இருந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், எல்லா துறையிலும் பாதிப்பு இருப்பதாகவும் ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்டாதோர் கடனை செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என்றும் செப்டம்பர் 6 ஆம் தேதி துறை ரீதியான குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இஎம்ஐ கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உத்தரவிட்டனர். வட்டி மேல் வட்டி போடுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Central government has stated categorically that the practice of paying interest on EMI loan installments cannot be abolished. They also ordered that the accounts of those who did not repay the EMI loan amount by August 31 should not be added to the credit list until further notice. The trial of the case against the plaintiff has been adjourned to September 10.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X