Breaking: 30ம் தேதி வரை மொத்த ரயிலும் ரத்து.. ஸ்பெஷல் மட்டும்தான் ஓடும்.. மத்ததெல்லாம் கேன்சல்!
டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது... முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தையும் ரயில்வே திரும்ப செலுத்திவிடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதேசமயம், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்லும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
51 நாட்களுக்கு பின்பு திரும்பவும் ரயில் சேவை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.. டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவும் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விட்டது.
வைரஸ் பாதிப்பால்தான் ரயில் சேவை நாடு முழுதும் நிறுத்தப்பட்டிருந்தது.. இந்த சமயத்தில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், டெல்லியில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களுக்கு முதற்கட்டமாக ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.. இதனால் மக்கள் முன்பதிவுக்கான வேலைகளில் இறங்கினர்.

வழக்கமான கட்டணம்
இந்த ஸ்பெஷல் ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி வெப்சைட்டில் மட்டுமே நடந்த நிலையில், வழக்கமான ரயில்வே நிலைய கவுன்டர்களில் ரிசர்வ் செய்யப்படவில்லை.. சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், ரயில் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் கட்டணம் திருப்பி தரப்படும் என்றெல்லாம் விதிமுறைகள் சொல்லப்பட்டன. முன்பதிவு தொடங்கப்பட்ட அன்று மாலையிலேயே அந்த இணையதளமே முடங்கியது. அந்த அளவுக்கு லட்சக்கணக்கானோர் அந்த நேரத்தில் முண்டியடித்து அந்த ரயில்களில் பயணம் செய்ய காத்திருந்தனர்.

அதிர்ச்சி
தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர் என்று ரயில்வே துறை தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்த அறிவிப்பினை பல்வேறு மாநில அரசுகள் பெரிதாக வரவேற்கவில்லை.. தொற்று இன்னமும் முழுமையாக கு ஓயாத நிலையில், எப்படி பயணிகளை அனுமதிப்பது என்ற யோசனையும் இருந்தது.. பொதுமக்களும் இந்த அறிவிப்பினை கண்டு அதிரவே செய்தனர்.

கட்டணங்கள்
இந்நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தையும் ரயில்வே முழுமையாக திரும்ப செலுத்திவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதேசமயம், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்லும் சிறப்பு ரயிகள் மட்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிகிறது.

குழப்பம் - எரிச்சல்
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி அவசரப்பட்டு முன்பதிவை தொடங்கினர், பிறகு ஏன் இப்படி ரத்து செய்கிறார்கள் என்று மக்களிடையே பெரும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. காரணம் இதுபோல ரத்து செய்வது முதல் முறையல்ல. அடிக்கடி குழப்புவதால் மக்கள் நிச்சயம் எரிச்சலடையவே செய்வார்கள் என்பதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications