ஏப்ரல் 19-ல் முதல் கட்ட லோக்சபா தேர்தல்.. 1625 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் வெறும் 134 தான்!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் மொத்தமே 134 பெண்கள்தான் வேட்பாளர்கள்.
மனித குலத்தின் சரிபாதி பெண்கள்தான். பெண்களுக்கான சமநீதி, சம உரிமை குறித்து தமிழ்நாடுதான் 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசியும் செயல்படுத்தியும் வருகிறது.

அண்மையில்தான் மத்திய அரசு நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதுவும் இப்போதைக்கு நடைமுறைக்கு வராது. 2029-ம் ஆண்டில்தான் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அமலுக்கு வரும்.
தற்போது 18-வது லோக்சபா தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் மொத்தம் 1625 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இவர்களில் வெறும் 134 பேர் பெண்கள். முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் யூனியன் பிரதேசங்களான
- அந்தமான், நிக்கோபர் தீவுகள் மற்றும் மிசோரமில் பெண் வேட்பாளர்கள் 16%.
- த்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் ஒருவர் கூட பெண் வேட்பாளர்கள் இல்லை.
- முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 21 மாநிலங்களில் 6 மாநிலங்களில் ஒருவர் கூட பெண் வேட்பாளர்கள் இல்லை.,
- 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொத்தம் 8,054 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 9% அதாவது 726 பேர் பெண் வேட்பாளர்கள்.
- 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்பிக்களாக தேர்வாகினர்.
- 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 575 பெண் வேட்பாளர்கள் டெபாசிட்டையே பறிகொடுத்தன்
- 2019-ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ்தான் அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் 41% பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.
- தற்போதைய தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் 1625 வேட்பாளர்கள் 1618 பேரின் வேட்பு மனுக்களை ஆராய்ந்ததில் 16% பேருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- தற்போதைய முதல் கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர் ரூ1 கோடிக்கு அதிகமான சொத்துகளை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 4.51 கோடி.
- முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் அனைத்து ஆர்ஜேடி கட்சி வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications