பாஜகவுக்கு 400 இடங்கள் கிடைக்காது.. 240 முதல் 260 இடங்கள்தான் கிடைக்கும்.. யோகேந்திர யாதவ் அதிரடி
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 400 இடங்கள் கிடைக்காது; பாஜக 240 முதல் 260 இடங்களைத்தான் கைப்பற்றும்; பாஜகவால் தனித்துப் பெரும்பான்மையைப் பெற முடியாது என தேர்தல் வியூக வகுப்பாளரான யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக 400க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேநேரத்தில் பாஜக 400க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றினால் அரசியல் சாசனத்தையே அழித்துவிடுவார்கள்; இடஒதுக்கீட்டையே ரத்து செய்துவிடும் என காங்கிரஸ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தென்னிந்தியாவின் 132 தொகுதிகளில் பாஜகவால் அதிகபட்சம் 20 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடியும்; வட இந்தியாவிலும் பாஜகவுக்கு கடு எதிர்ப்பு உள்ளது. வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆதரவு அலை இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இந்த முறை 100 இடங்களைத் தாண்டி வெல்லும் எனவும் ஊடகங்கள் எழுதி வருகின்றன அத்துடன் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் சொற்ப வாக்குகளில்தான் வென்றது. இந்த 40 தொகுதிகளின் முடிவுகளும் வேறாக இருந்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தேர்தல் வியூக வல்லுநரான யோகேந்திர யாதவ், பாஜவுக்கு 240 முதல் 260 இடங்கள்தான் கிடைக்கும்- அதாவது பாஜகவுக்கு தனித்துப் பெரும்பான்மை கிடைக்காது என்கிறார். அதேநேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் 35 முதல் 45 இடங்களைக் கைப்பற்றும். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 முதல் 305 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறார் யோகேந்திர யாவத். மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவை 272 இடங்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெல்லும் சாத்தியம் இருக்கிறது எனவும் யோகேந்திர யாதவ் கணித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான இடங்களில் வென்றால் "இந்தியா" கூட்டணி கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியங்களையும் மறுக்க முடியாது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications