2004 முதல் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் "பொய்யாகிப் போன" 5 எக்ஸிட் போல் முடிவுகள் எவை தெரியுமா?
டெல்லி: லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி பெரும் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் அப்படியே நடந்துவிடப் போவது இல்லை என்பதை கடந்த கால சில எக்ஸிட் போல் முடிவுகள் உறுதியாக சொல்லி இருக்கின்றன.
18-வது லோக்சபா தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின. 10-க்கும் மேற்பட்ட எக்ஸிட் போல் முடிவுகள் மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றன. ஒரு சில எக்ஸிட் போல் முடிவுகள், தொங்கு நாடாளுமன்றம் அமையலாம்.. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்கின்றன.

கடந்த காலங்களில் பொய்யாகிப் போன 5 எக்ஸிட் போல் முடிவுகளைப் பார்ப்போம்.
2004 லோக்சபா தேர்தல்: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 240 முதல் 275 இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன தங்களது எக்ஸிட் போல் முடிவுகளில். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 187 இடங்களே கிடைத்தன. அத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 216 இடங்களைக் கைப்பற்றியது.
2015 பீகார் தேர்தல்: 2015-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகதான் ஆட்சியைக் கைப்பற்றும் என பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் அத்தேர்தலில் ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் கூட்டணிதான் அமோக வெற்றியைப் பெற்றது. பீகார்ல் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் வென்றது என்பது சரித்திரம்.
2017 உ.பி. தேர்தல்: 2017-ல் உ.பி. சட்டசபை தேர்தல் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தொங்கு சட்டசபைதான் அமையும் என கணித்தன. அத்தேர்தலில் பாஜகதான் அதிகமான இடங்களைப் பெற்றன. மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களைக் கைப்பற்றியது.
2020 பீகார் தேர்தல்: 2020-ம் ஆண்டு பீகார் சட்ட்சபை தேர்தலில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன. ஆனால் பாஜக-ஜேடியூ கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியது.
2021 மே.வங்க தேர்தல்: 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொடர்பான இந்தியா டுடே- ரிபப்ளிக் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன. ஆனால் மொத்தம் உள்ள 294 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களைக் கைப்பற்றி எக்ஸிட் போல் முடிவுகளை பொய்யாக்கியது. பாஜகவுக்கு 77 இடங்கள்தான் கிடைத்தன.
இதேபோல 2015-ல் டெல்லி சட்டசபை தேர்தல், 2023-ல் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இருந்து மாறுபட்டே இருந்தன என்பதும் வரலாறுதான்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications