4ஆம் கட்ட லோக்சபா தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது! களத்தில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் யார்!
டெல்லி: 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 96 லோக்சபா தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்தச் சூழலில் அடுத்த கட்டமாக வரும் திங்கள்கிழமை மே 13ஆம் தேதி 3ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 96 லோக்சபா தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
நிறைவு: இந்த 4ஆம் கட்ட தேர்தலில் பீகார், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
மே 13-ல் ஆந்திரா தேர்தல்: ஜெகன் ஆட்சி தொடருமா? தங்கை ஷர்மிளா வீழ்த்திவிடுவாரா? மீள்வாரா 'நாயுடு'?
இந்த 4ஆம் கட்டத்தில் 10 மாநிலங்களில் உள்ள மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் ஒரு தொகுதி, ஜார்கண்ட் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 8 தொகுதிகள், மகாராஷ்டிரா 11 தொகுதிகள், ஒடிசா 4 தொகுதிகள், தெலுங்கானா 17 தொகுதிகள், உத்தரப் பிரதேசம் 13 தொகுதிகள், மற்றும் மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது
நட்சத்திர வேட்பாளர்கள்: இதில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்... இதில் அகிலேஷ் யாதவ் (உத்தரப் பிரதேசம்), மஹுவா மொய்த்ரா (மேற்கு வங்கம்) கிரிராஜ் சிங் (பீகார்) ஒய்.எஸ்.சர்மிளா (ஆந்திரப் பிரதேசம்), சத்ருகன் சின்ஹா (மேற்கு வங்காளம்), ஓவைசி(தெலுங்கானா) என பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆந்திர தேர்தல்: 4ஆம் கட்ட தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைத் தக்கவைக்கப் போட்டியிடுகிறார். அதேநேரம் அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் பவன் கல்யாண் உடன் கூட்டணி அமைத்துக் களமிறங்குகிறார். இது தவிர காங்கிரஸ் சார்பில் ஒய்.எஸ்.சர்மிளாவும் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த 96 லோக்சபா தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications