ரொம்பவே நெருக்கம் காட்டும் ராகுல்- கமல்ஹாசனை முன்வைத்து திமுகவை விட்டு விலகுகிறதா காங்கிரஸ்?
டெல்லி: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடும் வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, கமல்ஹாசன் எனும் இருவரின் உரையாடல் மட்டுமாக இதை பார்க்க முடியாது; லோக்சபா தேர்தல் சூழலில் இந்த உரையாடல் பல்வேறு அரசியல் விவகாரங்களை வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் வலதும் இல்லாத, இடதும் இல்லாத, திராவிடமும் இல்லாத மய்ய அரசியல் எனும் கோட்பாட்டை முன்வைப்பதாக சொல்கிறார். ஆனால் நடைமுறையில் கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் சில நேரங்களில் வலதுசாரிகளின் குரலாக இருக்கிறது; பல நேரங்களில் இடதுசாரிகளுக்கும் திராவிட கட்சிகளுக்கும் ஆதரவாக இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

இந்திய அளவில் காங்கிரஸ், பாஜக எனும் இரு பெரும் கட்சிகள்தான் தேசிய கட்சிகள். இரண்டுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதும் இல்லை. தீவிர இந்துத்துவா பேசக் கூடியது பாஜக; மென்மையாக பேசக் கூடியது காங்கிரஸ்; இரண்டுக்கும் பொதுவானதாக எப்போது வேண்டுமானாலும் இருதரப்புடனும் இணைந்து கொள்ளக் கூடியது இடதுசாரிகள். இப்போது காங்கிரஸ் இடத்துக்கு ஆம் ஆத்மி வேகமாக முன்னேறி வருகிறது.
அத்தகைய ஆம் ஆத்மிதான் கமல்ஹாசனின் முதல் சாய்ஸாக இருந்தது. அவரது அரசியல் என்பது ஆம் ஆத்மியின் சாயலைக் கொண்டது. அவரால் திமுகவுடனும் இணக்கமாக போக முடியும்; இடதுசாரிகளுடனும் இணக்கமாக போக முடியும்; காங்கிரஸுடன் நெருக்கமாக முடியும்; தூய்மை பாரதம் போன்ற விவகாரங்களில் பாஜகவின் தூதராகவே செயல்படவும் முடியும். அரசியலில் ஆணித்தரமான நிலைப்பாட்டை வைத்துக் கொள்ளாமல் மையமான- மய்யமான போக்கை கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் இந்த மய்யவாத அரசியல் தமிழகத்துக்கு புதியதுதான். ஆனால் புதிய சித்தந்தம் என்ற பார்வையுடன் வாக்காளர்கள் பார்ப்பது இல்லை. ஏற்கனவே இருக்கிற எரிகிற கொள்ளிகளில் இது நல்ல கொள்ளியாக இருக்குமா என்றுதான் பார்ப்பார்கள். அந்த வகையில் கமல்ஹாசன் என்ற தனிநபரை ஓரளவு நல்ல கொள்ளி என கருதுகிறர்கள் வாக்காளர்கள்; ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை ஏற்க முடியாது என்பதையே தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த பின்னணியில் அடுத்து வரும் லோக்சபா தேர்தல் கமல்ஹாசனுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆட்சியைப் பிடிக்க கூடிய பலமும் இல்லை; அந்த எண்ணமும் இல்லை. இருப்பைத் தக்க வைக்கத்தான் போராடுகிற நிலைமை இருக்கிறது. அதனால்தான் இதுநாள் வரை திமுக கூட்டணியில் கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். திமுக தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் இதுவரை வலிமையாகவே இருந்து வருகிறது.
இந்த மெகா கூட்டணியில் கல்லெறிய வேண்டியது பாஜகவின் அரசியல் பணி. அதாவது திமுக கூட்டணி கட்சிகளை வெளியேற்றி திமுகவுக்கு ஒட்டுமொத்த வாக்குகளும் செல்வதை சிதறிடிப்பது; அதன் மூலம் தேர்தல் அறுவடையை செய்வது என்பது பாஜகவின் வியூகம். இந்த வியூகங்களுக்கு இடம் தருவதைப் போல காங்கிரஸ் தம் போக்கில் செயல்படுவது என்பது அரசியல் தற்கொலை. அதாவது பாஜகவுக்கு வெற்றியை தாம்பாலத்தில் காங்கிரஸே வாரி வழங்குவதாகும்.

இந்த வேலையைத்தான் இப்போது காங்கிரஸ் தமிழகத்தில் செய்ய தொடங்கி இருக்கிறதா? என்பதே அதன் செயல்பாடுகள் மூலம் எழும் கேள்வி. ராகுல் காந்தியின் பாதயாத்திரையை என்னதான் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தொடங்கி வைத்தாலும், டெல்லியில் அந்த யாத்திரைக்கு திமுக எம்பிக்கள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படவில்லை. அழையா விருந்தாளியாகவே கனிமொழி எம்பி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் விசிகவையும் கூட்டணியில் இல்லாத மநீம கமல்ஹாசனையும் விரும்பி அழைத்தது காங்கிரஸ். அத்துடன் இந்த விவகாரம் ஓய்ந்துவிடவில்லை.
கமல்ஹாசனுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது; கமல்ஹாசனை வைத்து உரையாடல் மேற்கொண்டு அதை செய்திகளாக்குவது என கமல்ஹாசனை முன்னிலைப்படுத்துவதில் காங்கிரஸ் முனைப்பாக இருக்கிறது. இத் அப்பட்டமாக திமுகவை வெறுப்பேற்றுகிற செயல். இது திமுக கூட்டணியில் இருந்து இயல்பாகவே தம்மை காங்கிரஸ் துண்டித்துக் கொள்கிற/ வெளியேற்றுகிற நடவடிக்கை.
அதாவது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக உள்ளிட்டவை வெளியேறி அதிமுக எடப்பாடி கோஷ்டியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியின் வெளிப்பாடு என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதனால் சேதாரம் எங்கேயும் திமுக அணிக்கு வரப் போவது இல்லை. மண்குதிரையாக இருக்கும் மநீமவை நம்பி குதிரை சவாரிக்கு போகிற கதைதான் காங்கிரஸுக்கு ஏற்படும்; இது பாஜகவுக்கு சில தொகுதிகளில் எளிதான வெற்றியை கொடுக்கும் என்பதை காங்கிரஸ் உணரவே இல்லையா? என்பது திமுக வட்டாரங்களின் கேள்வி.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications