லோக்சபா தேர்தல்: பாஜக கூட்டணியில் சரணாகதி அடைந்தது குமாரசாமியின் மஜத- டெல்லி சந்திப்பில் பரபர!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேஎடிஎஸ்) கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸும் மஜதவும் இணைந்து போட்டியிட்டன. அத்தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 28 இடங்களில் 25ஐ கைப்பற்றியது. காங்கிரஸ், மஜதவுக்கு தலா 1 இடம்தான் கிடைத்தது. மஜத- காங்கிரஸ் கூட்டணிக்கு இது மிகப் பெரும் தோல்வியாக அமைந்தது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெறும் 19 இடங்களில் மட்டும் வென்றது மதச் சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்). 2018-ம் ஆண்டு தேர்தலில் மஜத மொத்தம் 37 இடங்களில் வென்றிருந்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா வாக்குகள் பெருமளவு காங்கிரஸை நோக்கி திரும்பியது. இதனால் மஜத கட்சியால் அந்த ஜாதி வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன் அந்த கட்சி கை கோர்க்கலாம் என தொடக்கத்தில் பேச்சுகள் எழுந்தன. ஆனால் காங்கிரஸ் இதனை விரும்பவில்லை என கூறப்பட்டது. 2019 லோக்சபா தேர்தல் அனுபவத்தில் காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்தது.

இதனையடுத்து மஜதவுக்கு ஒரே ஒரு போக்கிடமாக இருப்பது பாஜக மட்டும்தான். இருந்த போதும் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் பதவி, மத்திய அமைச்சர் பதவி என பல்வேறு நிபந்தனைகளை பாஜக கூட்டணியில் சேருவதற்கு மஜத தரப்பில் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் மஜத இணைவது தாமதாகி வந்தது.
இந்நிலையில் டெல்லி சென்ற கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 39-வது கட்சியாக குமாரசாமியின் மஜத அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இருதரப்பும் முதன்மையான பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். எங்கள் தரப்பில் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை என விளக்கம் கொடுத்தார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications