சிலிண்டர் பயன்பாட்டில் தீண்டாமை... ஏழைகளை விலக்கும் பாஜக... விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
டெல்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ரூ.50 அதிகரித்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.585.50 வரை உயர்ந்து தற்போது ரூ.1,015 ஆக விற்பனையாகிறது. இது ஏழை மக்களை சிலிண்டர் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கும் என காங்கிரஸ் கட்சி, மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளது.
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தலையொட்டி சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் இருந்தன. அதன்பிறகு படிப்படியாக விலைகள் அதிகரிக்கப்பட்டன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து இந்த பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தற்போது 29 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

இன்று ரூ.50 அதிகரிப்பு
இருப்பினும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் பாரபட்சமின்றி அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.965க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1000யை கடந்து ரூ.1,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

45 நாளில் 2வது முறையாக உயர்வு
இதற்கு முன்பு மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த மாத துவக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.104 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video


காங்கிரஸ் விமர்சனம்
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவலா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛2014 முதல் 2022 காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது இரண்டு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.100 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது ஏழை மக்களை மோசமாக பாதிக்கும். அதோடு அவர்களை சிலிண்டர் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

8 ஆண்டில் ரூ.585.50 அதிகரிப்பு
மேலும் 2014ல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை தற்போதைய விலையுடன் ஒப்பிட்டு சில விபரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி 2014ல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.414 ஆக இருந்தது. தற்போது ரூ.585.50 ஆக அதிகரித்து விலை ரூ.1,015 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 2012-2013 காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியம் ரூ.39,558 ஆகவும், 2013-14 காலத்தில் ரூ.46,458 கோடியாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications