பிரதமர் மோடியின் "OBC" முழக்கம்.. டார் டாராக வெளுத்து விளையாடும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே!
டெல்லி: பிரதமர் மோடி தம்மை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் (OBC, ஓபிசி) என முழக்கமிட்டுக் கொள்வதை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் ஓபிசி முழக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருப்பதாவது: இப்போது எல்லாம் மோடி அவர்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சமூக நீதிக்கான பாடத்தை கற்பித்து வருகிறார். அவர்களின் சாதிக்கு ஓபிசி அந்தஸ்து கிடைத்தது. அவர் தன்னை "மிகப்பெரிய OBC" என்றும் அழைக்கத் தொடங்கினார்.

போராட்டமா நடத்தினார்?: மோடி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தாமல் ஓபிசி பிரிவின் அந்தஸ்தைப் பெற்றார், ஆனால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க தொடர்ந்து போராடி வருகின்றனர். நாட்டில் இதுபோன்ற பல பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன, அவர்கள் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு மோடியின் எதிர்ப்பால் OBC அந்தஸ்தைப் பெற முடியாது. மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சாதிக்கு ஓபிசி அந்தஸ்து பெறுவதற்காக பல ஆண்டுகளாக வீதியில் இறங்கி உள்ளனர்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஓபிசியின் உலகத் தலைவராக மோடி! ஆனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று கூறுவாரா? சமூக நீதியை நடைமுறைப்படுத்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானது. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றி, ரூ9 லட்சம் மதிப்புள்ள சூட் அணிந்து, ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள பேனாவால் எழுதும் மோடிக்கு, OBC என்றால் - 'ஒன்லி பிசினஸ் கிளாஸ்'. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களால் ஒருபோதும் நீதி வழங்க முடியாது. தேர்தலுக்காக சான்றிதழில் OBCக்கள் ஆனவர்கள், தங்கள் ஆட்சி நாட்களை எண்ண வேண்டியது தான், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் எடுத்துக் காட்டுவோம். தமது நண்பர்களுக்கு" நாட்டின் செல்வத்தால் நிரப்பப்பட்ட கருவூலம், இளைஞர்களுக்கு 'வேலையில்லா திண்டாட்டம்' என்ற நோய் கொடுத்தவர்தானே மோடி.
மோடி பிறப்பால் அல்ல, அவர் 'பேப்பரால் OBC'. அவர் பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் OBC ஆக இருக்கவில்லை. என்னுடைய இந்த உண்மையை உறுதி செய்த பாஜக அரசுக்கு நன்றி. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications