டெல்லி சாணக்கியாவிற்கு என்ன ஆச்சு? பவாரின் பவர் தெரியுதா?.. அமித் ஷாவை வம்பிழுக்கும் என்சிபி!
டெல்லியில் அரசியல் சாணக்கியர் அமித் ஷா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் தோற்றுவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மும்பை: டெல்லியில் அரசியல் சாணக்கியர் அமித் ஷா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் தோற்றுவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
கடைசியாக ஒரு வழியாக மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்று அந்த கட்சி கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
ஐந்து வருடமும் அங்கு சிவசேனாதான் ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலும் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

சரத் பவார்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்களுக்கு முக்கிய காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பார்க்கப்படுகிறார். பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக இவர் நகர்த்திய காய்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளது. சிவசேனாவை என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே கொண்டு வந்ததும் இவரின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

மொத்தம் எத்தனை
மொத்தமாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் வெளியேற்றி உள்ளது. பாஜகவிற்கு இருந்த மிகப்பெரிய இந்துத்துவா கட்சி நண்பன் என்றால் அது சிவசேனாதான். ஆனால் தற்போது சரத் பவார் அவர்கள் இருவரையும் பிரித்து இருக்கிறார்.

அமித் ஷா எப்படி
இந்த நிலையில் அமித் ஷாவை கிண்டல் செய்து தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார். அதில், டெல்லியில் யாரோ அரசியல் சாணக்கியர் இருக்கிறார் என்று எல்லோரும் கூறினார்கள். ஆனால் அவர் தற்போது காணாமல் போய்விட்டார்.

அமித் ஷா தோல்வி
அவரின் திட்டங்கள் எதுவும் செயல்படவில்லை. சரத் பவார் தன்னுடைய அரசியல் அனுபவத்தை நிரூபித்துவிட்டார். தன்னுடைய சக்தி என்ன என்று அவர் மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார். பாஜகவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியல் சாணக்கியா
இந்தியாவின் உண்மையான அரசியல் சாணக்கியர் யார் என்பதை தற்போது சரத் பவார் நிரூபித்துள்ளார். டெல்லியின் மகுடம் முன் மகாராஷ்டிரா என்றும் மண்டியிடாது. அதை சரத் பவாரின் அரசியல் சாணக்கியத்தனம் இன்று நிரூபித்து இருக்கிறது. ஜெய் மகாராஷ்டிரா, என்று நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications