டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்று புதிரான சம்பவங்கள் நடந்தது.. ஆளுநருக்குத்தான் உண்மை தெரியும்.. கபில் சிபல் பரபரப்பு வாதம்!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? ஆளுநர் செய்ததில் எதுவெல்லாம் தவறு என்று சிவசேனா - காங். - என்சிபி சார்பாக ஆஜாரன மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? ஆளுநர் செய்ததில் எதுவெல்லாம் தவறு என்று சிவசேனா - காங். - என்சிபி சார்பாக ஆஜாரன மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த மனு மீதான அவசர விசாரணை தற்போது துவங்கி நடந்துது.

இதில் சிவசேனா - காங். - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பாக சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தார், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். நீதிபதிகள் என்வி ரமணா, அசோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார்.. நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.. அதனால்தான்.. அரசு தரப்பு ஷாக் வாதம்! ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார்.. நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.. அதனால்தான்.. அரசு தரப்பு ஷாக் வாதம்!

என்ன வாதம்

என்ன வாதம்

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் - என்சிபி - சிவசேனா சார்பாக கபில் சிபல் வாதம் செய்தார். அதில், ஞாயிற்றுக்கிழமை உங்களை வரவழைத்ததற்கு மன்னிக்கவும் என்று மன்னிப்புடன் கபில் சிபல் தனது வாதத்தை துவங்கினார். இதற்கு, இது எங்கள் பணி, கவலை வேண்டாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆட்சி எப்படி

ஆட்சி எப்படி

இந்த நிலையில் கபில் சிபல் தனது வாதத்தில், மகாராஷ்டிராவில் 288 இடங்கள் உள்ளது, ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. பாஜகவை ஏற்கனவே ஆளுநர் அழைத்தார் .

ஆனால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. மகாராஷ்டிராவில் ஆளுநர் சுயமாக முடிவு எடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் அதை நேர்மையாக சட்டப்படி செய்யவில்லை.

முடிந்தது

முடிந்தது

22ம் தேதியே சிவசேனா ஆட்சி அமைக்கும் முடிவிற்கு வந்துவிட்டது. இதற்கான முடிவு குறித்து 22ம் தேதி இரவு சிவசேனா செய்தியாளர்களை சந்தித்தது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி உறுதியானது.உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்க இருந்தார்.

மோசம்

மோசம்

22ம் தேதிக்கு பின் மோசமான விஷயங்கள் நடந்துவிட்டது. நான் இதுவரை பார்க்காத அரசியல் மாற்றங்கள் நடந்தது. 23ம் தேதி அதிகாலை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. எமெர்ஜென்சி போல, அமைச்சரவை கூட்டம் நடத்தாமல் இதை செய்துள்ளனர்.

பட்னாவிஸ் முதல்வரானார்

பட்னாவிஸ் முதல்வரானார்

திடீரென்று அதிகாலையில் பட்னாவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணைக்கு முதல்வரானார். எதன் அடிப்படையில் இந்த பதவி ஏற்பு நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பாஜகவுடன் சேனா கூட்டணி முறிந்தால், புதிய கூட்டணியை உருவாக்கியது. 23ம் தேதி காலை நடந்த சம்பவம் மிகவும் புதிரானது.

என்ன விதிகள்

என்ன விதிகள்

இந்த நடவடிக்கை எதிலும் விதிகள் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க விதிகளை மீறி ஆளுநர் செயல்பட்டு இருக்கிறார்.மத்திய அரசின் கைப்பாவை போல ஆளுநர் செயல்பட்டு வருகிறார், என்று கபில் சிபல் கூறினார். இதையடுத்து பாஜக எப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரியது ? என்று நீதிபதி அசோக் பூஷன் கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு தெரியவில்லை

எங்களுக்கு தெரியவில்லை

அதற்கு எங்களுக்கு தெரியவில்லை, ஆளுநருக்குத்தான் தெரியும், என்று கபில் சிபல் கூறினார். கபில் சிபல் மேலும், அவர்களால் முடிந்தால் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்கட்டும். அவர்களிடம் மெஜாரிட்டி இல்லை என்றால் எங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். கர்நாடக சட்டசபை வழக்கை கபில் சிபல் எடுத்துக்காட்டினார்.

English summary
Maharshtra: Kabil Sibal arugument for Sena- NCP - Congress asking for an immediate floor test case in SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X