புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்.. கணவர் வழியில் ராணுவத்தில் சேர்ந்த மனைவி!
டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜரின் மனைவியும் நாட்டுக்காக சேவையாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படைவீரர்கள் (சிஆர்பிஎஃப்) சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். வெடிப்பொருள்களை ஏற்றி வந்த தீவிரவாதிகளின் வாகனத்தை சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தின் மீது மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல்
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியால் வீரமரணடைந்தார்.

உடல்
விபூதி சங்கர் தவுந்தியாலுக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள்தான் ஆகின. முதலாவது திருமண நாளை கொண்டாட ஏப்ரல் மாதம் விடுப்பில் வருவதாக இருந்தார். ஆனால் தீவிரவாதிகள் தாக்குதலில் மூவர்ணக் கொடி போர்த்திய நிலையில் அவரது உடல்தான் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தனியார் நிறுவனம்
உடலை பார்த்த அவரது மனைவி நிகிதா கவுல், "நீங்கள் என்னை நேசித்தீர்கள் என்று சொன்னீர்கள், ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் இந்த தேசத்தைதான் அதிகம் நேசித்தீர்கள். உங்களால் நான் பெருமைப்படுகிறேன் என கண்ணீர் வடித்தார். இதையடுத்து தனியார் நிறுவன வேலையை உதறி தள்ளினார்.
|
நாட்டுக்கு தொண்டாற்ற
கணவரை போல் நாட்டுக்கு தொண்டாற்ற வேண்டும் என நினைத்து ராணுவப் பயிற்சியில் சேர்ந்தார். சென்னையில் 11 மாத பயிற்சி முடித்த அவர் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் நட்சத்திரத்தை அணிந்து கொண்டு தன்னை முறைப்படி ராணுவத்தில் இணைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications