எரியும் மணிப்பூர்: முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய 13 சிவில் அமைப்புகள் கெடு
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நீடித்து வரும் நிலையில் முதல்வர் பைரேன் சிங் உட்பட 50 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று 13 பொதுமக்கள் அமைப்புகள் கெடு விதித்துள்ளதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் 6 மைத்தேயி இனக்குழுவினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகள் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் 13 பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன.
மணிப்பூரில் 2 ஆண்டுகளாக மைத்தேயி- குக்கி இன மக்களிடையே தொடர் மோதல் நிகழ்ந்து வருகிறது. தற்போது குக்கி இன மக்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். குக்கி இன மக்களுக்கு தனி நிர்வாக அமைப்பை உருவாக்க கோருகின்றனர். இந்த மோதல்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் மைத்தேயி இனக்குழுவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகளை மைத்தேயி இன மக்கள் தாக்கி தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 13 பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து மக்கள் கிளர்ச்சி ஓயாத நிலையில் அர்சியல் ரீதியாக தீர்வு காண முடியாததால் முதல்வர் பைரேன் சிங் உட்பட 50 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என கெடு விதித்துள்ளனர். இந்த பொதுமக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான சந்தா நஹாக்பம், குக்கி ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட மைத்தேயி பெண்கள், குழந்தைகளை மணிப்பூர் அரசால் உயிரோடு மீட்க முடியவில்லை. அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கையாலாகாத அரசாகவே இருந்துவிட்டது. இதனால்தான் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் மற்றும் 50 எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்தாக வேண்டும். அதுவரை பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications