மணிப்பூர்: மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பூட்டிய மாணவர் அமைப்பு! குக்கிகளை வெளியேற்றும் அஸ்ஸாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் சுயாட்சி நிர்வாகக் கவுன்சில் கோரி குக்கிகள் முன்னெடுத்து வரும் ஆயுதப் போராட்டம் மற்றும் வன்முறைகளை ஒடுக்க தவறியதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்களை மைத்தேயி இனக்குழுவின் மாணவர் அமைப்பினர் இழுத்துப் பூட்டினர். மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் யாரும் செல்லக் கூடாது எனவும் மைத்தேயி மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,000 குக்கி இனக்குழுவினரை மீண்டும் மணிப்பூருக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மணிப்பூரில் குக்கி இன மக்கள், தங்களது பகுதிகளை ஒருங்கிணைத்து சுயாட்சி கவுன்சில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் மைத்தேயி இனத்தினரை கடத்தி கொடூரமாகவும் படுகொலை செய்து வருகின்றனர். இதனால் மணிப்பூரில் பெரும் பதற்றம் தொடருகிறது. குக்கி ஆயுதக் குழுவினரை ஒடுக்குவதற்காக 20,000 ராணுவத்தினர் மணிப்பூரில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

manipur manipur violence

ஆனால் மணிப்பூர் மாநில பாஜக அரசும் மத்திய பாஜக கூட்டணி அரசும் குக்கி இனக்குழுவின் தாக்குதல்களை கட்டுப்படுத்தவில்லை என்கிற கோபத்தில் மைத்தேயி மக்கள் குமுறி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மணிப்பூர் மாநிலத்தில் மத்திய- மாநில அரசு அலுவலகங்களை இழுத்துப் பூட்டி ஊழியர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியது மைத்தேயி மாணவர் அமைப்பு. அத்துடன் மத்திய- மாநில அரசு ஊழியர்கள் யாரும் அலுவலகங்களுக்கு செல்லக் கூடாது எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே அஸ்ஸாமில் அகதிகளாக தஞ்சமடைந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,000 குக்கி இன மக்களை மீண்டும் மணிப்பூருக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. குக்கி இனக்குழுவினருக்கு ஏற்கனவே மிசோரம் மாநில அரசு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் மணிப்பூர் மாநில அரசுக்கும் மிசோரமுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தற்போது குக்கி இனமக்களுக்கு எதிரான அஸ்ஸாம் நடவடிக்கையில் மிசோரம் என்ன எதிர்வினையாற்றும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+