தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எப்படி தடுப்பூசி கிடைக்குது?மத்திய அரசுக்கு மணீஷ் சிசோடியா கேள்வி
டெல்லி: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு; ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகள் தாராளமாக கிடைக்கிறது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மத்திய அரசு இந்த தடுப்பூசிகளைக் கொடுத்தால் மட்டுமே இம்முகாம்கள் திறக்கப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகள் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. அதாவது ஜூன் 10-ந் தேதிக்கு முன்னர் அந்த தடுப்பூசிகள் எங்களுக்கு கிடைக்காது என்கிறது மத்திய அரசு.
டெல்லியைப் பொறுத்தவரையில் அடுத்த மாதம் முதல் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு மொத்தம் 5.5 லட்சம் தடுப்பூசிகள் தேவை. கடந்த ஏப்ரல் மாத 4.5 லட்சம்; மே மாதம் 3.67 லட்சம் தடுப்பூசிகளை கொடுத்துள்ளது மத்திய அரசு. டெல்லிக்கு தேவை 1.84 கோடி தடுப்பூசிகள்.
கொரோனா தடுப்பூசி விநியோகப் பொறுப்பு மத்திய அரசின் கையில் உள்ளது. மாநிலங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்கிறது மத்திய அரசு. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கிடைத்து வருகிறது?
இவ்வாறு மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications