யாத்திரை செல்லுங்கள்..ஆன்மீகத்தை மட்டுமல்ல ஒரே பாரதம்; உன்னத பாரதத்தையும் தரிசிக்கலாம்: பிரதமர் மோடி
டெல்லி: நாட்டு மக்கள் ஒரு யாத்திரையை மேற்கொண்டால், உங்களுக்கு ஆன்மீகத்தோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதத்தையும் தரிசிக்க முடியும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யாத்திரைகள் குறித்து பேசியதாவது: நமது உபநிஷதங்களில் ஒரு உயிர் மந்திரம் உண்டு - சரைவேதி சரைவேதி சரைவேதி - நீங்கள் கண்டிப்பாக இந்த மந்திரத்தைக் கேட்டிருக்கலாம். இதன் பொருள் - சென்று கொண்டே இரு, சென்று கொண்டே இரு என்பது தான். இந்த மந்திரம் நமது தேசத்திலே ஏன் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது என்றால், தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருத்தல், இயங்கிக் கொண்டு இருத்தல் என்பது தான் நமது இயல்புநிலை.
ஒரு நாடு என்ற முறையிலே, நாம், ஆயிரக்கணக்கான வளர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டு தான் இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலே, நாம் எப்போதும், புதிய எண்ணங்கள், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் சென்றிருக்கிறோம். இதன் பின்னே, நமது கலாச்சார வேகத் தன்மை, பயணங்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆகையினால் தான் நமது ரிஷிகளும் முனிவர்களும், தீர்த்தயாத்திரை போன்ற தார்மீகக் கடமைகளை நமக்கு அளித்திருக்கிறார்கள். பல்வேறு தீர்த்த யாத்திரைகளை நாம் அனைவரும் மேற்கொள்கிறோம்.

சார்தாம், புரி யாத்திரை
இந்த முறை சார்தாம் யாத்திரையில் எந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். நமது தேசத்திலே பல்வேறு சமயங்களில் பல்வேறு தேவ யாத்திரைகள் நடைபெறுகின்றன. தேவ யாத்திரைகள், அதாவது, இதில் பக்தர்கள் மட்டுமல்ல, நமது பகவானே கூட யாத்திரை மேற்கொள்கிறார். சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று பகவான் ஜகன்னாதரின் புகழ்மிக்க யாத்திரை தொடங்க இருக்கிறது. ஒடிஷாவின், புரியின் யாத்திரை பற்றி நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும். பகவான் ஜகன்னாதரின் யாத்திரை ஆஷாட மாத துவிதியையில் தொடங்குகிறது. ஆஷாடஸ்ய துவிதீயதிவசே... ரதயாத்திரை, என்று நமது புனித நூல்களில், சம்ஸ்கிருத சுலோகங்கள் வாயிலாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத துவிதியையில் ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நான் குஜராத்தில் இருந்தேன், அப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரையில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து வந்தது.

சம்ஸ்கிருத கொண்டாட்டம்
ஆஷாட துவிதீயை, இதை ஆஷாடீ பீஜம் என்றும் அழைப்பார்கள்; இந்த தினத்திலிருந்து தான் கட்ச் பகுதியின் புத்தாண்டும் தொடங்குகிறது. கட்ச் பகுதியைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மேலும் ஒரு காரணத்தின் பொருட்டு விசேஷமானது - ஆஷாட துவிதீயாவிலிருந்து ஒரு நாள் முன்பாக, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் திதியன்று நாங்கள் குஜராத்தில் ஒரு சம்ஸ்கிருதக் கொண்டாட்டத்தைத் தொடக்கினோம், இதில் சம்ஸ்கிருத மொழியில் பாடல்கள்-இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ஆஷாடஸ்ய பிரதம திவஸே, அதாவது ஆஷாட மாதத்தின் முதல் தினம் என்பதே இதன் பொருள். கொண்டாட்டத்திற்கு இந்த சிறப்பான பெயரைக் கொடுப்பதன் பின்னணியில் ஒரு காரணம் உண்டு. உண்மையில், சம்ஸ்கிருதத்தின் மாபெரும் கவியான காளிதாஸன், ஆஷாட மாதத்திலிருந்து மழையின் வருகையைக் கொண்டு மேகதூதம் காவியத்தை எழுதினான். மேகதூதத்திலே ஒரு ஸ்லோகம் உண்டு ஆஷாட மாதத்தின் முதல் தினத்தன்று மலைச் சிகரங்களைத் தழுவியிருக்கும் மேகங்கள் என்ற இந்த ஸ்லோகம் தான், இந்த நிகழ்ச்சிக்கான ஆதாரமாக அமைந்தது.

யாத்திரைகள் ஏன்?
நண்பர்களே, அஹ்மதாபாதாகட்டும், புரியாகட்டும், பகவான் ஜகன்னாதர் தனது இந்த யாத்திரை வாயிலாக நமக்குப் பல ஆழமான மனிதநேயம் மிக்க செய்திகளை அளிக்கிறார். பகவான் ஜகன்னாதர் உலகிற்கே ஸ்வாமியாக இருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை; ஆனால் அவரது இந்த யாத்திரையில் ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான பங்களிப்பு இருக்கிறது. பகவானும் கூட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு, நபருடன் இணைந்து பயணிக்கிறார். அந்த வகையில் நமது யாத்திரைகள் அனைத்திலும், ஏழை-செல்வந்தர், உயர்தோர்-தாழ்ந்தோர் என எந்த வேறுபாடும் காணக் கிடைக்காது. அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, யாத்திரை தான் தலையாயதாக விளங்குகிறது.

அமர்நாத் யாத்திரை
உதாரணமாக, மஹாராஷ்டிரத்தின் பண்டர்பூரின் யாத்திரை பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருக்கலாம். பண்டர்பூரின் யாத்திரையில், யாரும் பெரியவரும் இல்லை, யாரும் சிறியவரும் இல்லை. அனைவருமே வார்கரிகள் தாம், பகவான் விட்டலனின் சேவகர்கள் தாம். இன்னும் 4 நாட்கள் கழித்து ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரையும் தொடங்க இருக்கிறது. நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கெடுக்க ஜம்மு கஷ்மீரம் வருகிறார்கள். ஜம்மு கஷ்மீரத்தின் வட்டார மக்களும், அதே அளவு சிரத்தையோடு இந்த யாத்திரையின் பொறுப்புக்களை மேற்கொண்டு, தீர்த்த யத்திரிகர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றார்கள்.

சபரிமலை யாத்திரை
நண்பர்களே, தெற்கிலும் இப்படிப்பட்ட மகத்துவமான சபரிமலை யாத்திரை இருக்கிறது. சபரிமலையின் மீது குடிகொண்டிருக்கும் பகவான் ஐயப்பனை தரிசிக்க மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை, பயணிக்கும் பாதை முழுமையாகக் காடுகள் நிரம்பியதாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இன்றும் கூட மக்கள் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்ளும் போது, சமயச் சடங்குகள் தொடங்கி, தங்கும் வசதிகள், ஏழைகளுக்கு இதனால் ஏற்படும் வாய்ப்புகள், அதாவது இந்த யாத்திரைகள் இயல்பிலேயே ஏழைகளுக்குச் சேவை செய்ய ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது, இது அந்த ஏழைகளுக்கு மிகுந்த ஆதாயமாக இருக்கிறது என்பது தான். ஆகையால், தேசமும் கூட இப்போதெல்லாம் ஆன்மீக யாத்திரைகளின் பொருட்டு, பக்தர்களின் வசதிகளை அதிகரிக்க பல முயல்வுகளை மேற்கொள்கின்றது. நீங்களும் ஒரு யாத்திரையை மேற்கொண்டால், உங்களுக்கு ஆன்மீகத்தோடு கூடவே, ஒரே பாரதம் உன்னத பாரதத்தையும் தரிசிக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications