பழைய வழக்கு.. புது கணக்கு.. 'நெருக்கும் டெல்லி'.. செந்தில் பாலாஜியின் அட்வான்ஸ் மூவ்.. தப்பிப்பாரா?
டெல்லி : நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீதான அமலாக்கத்துறையின் பிடி இறுகி வரும் நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
போக்குவரத்து துறை நியமன முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என்பதை உணர்ந்த செந்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்குப் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

5 அமைச்சர்கள்
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால், அவர்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். இவர்களில் சிலரிடம் அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணையும் மேற்கொண்டது. நாடு முழுவதும் பாஜக சாராதவர்கள் மீது அமலாக்கத்துறையினரின் பிடி இறுகி வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் மீதான இந்த வழக்குகள் பெரும் சோதனையாக பார்க்கப்பட்டு வருகின்றன.

அதிமுக ஆட்சியில்
தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இறங்கிய அமலாக்கத்துறை
இந்த மோசடியில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவு 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.

செந்தில் பாலாஜி வாதம்
இந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கப் பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

மீண்டும் நெருக்கும்
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவலால் அடுத்து என்ன செய்வது என ஆலோசித்து வந்தார் செந்தில் பாலாஜி.

கேவியட் மனு
இந்நிலையில் தான் 'அலெர்ட்டாக' உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பட்சத்தில் தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ராம்சங்கர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications