Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபிசி நிறுவனத்தில் 60 மணி நேர ஆய்வு.. வருமான வரித்துறையின் அறிக்கை..என்ன சொல்லியிருக்கு தெரியுமா?

பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதில், அந்த நிறுவனம் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளது என்றும் இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. India: The Modi Question என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது.

இந்த ஆவணப்படங்களை வெளியிட மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் இந்த பதிவுகளை அகற்றுவதற்கு யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தடையை மீறி கேரளா, டெல்லி என பல இடங்களில் இந்த ஆவணப்படம் பல்வேறு பகுதிகளில் திரையைிடப்பட்டது. பிபிசி ஆவணப்பட விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடியாக ஆய்வு நடத்தியது.

 அரசியல் தலைவர்கள் கண்டனம்

அரசியல் தலைவர்கள் கண்டனம்

கடந்த 14-ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிபிசி நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவைகளை ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிபிசி நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

வருமான வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறையினரின் ஆய்வு காரணமாக பிபிசியின் டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்தனர். இரவு பகலாக கடந்த 3 நாட்களாக சுமார் 60 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நேற்று முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

வருவாய் அளவு ஒத்துப்போகவில்லை

வருவாய் அளவு ஒத்துப்போகவில்லை

வருமான வரித்துறை அளித்த விளக்கத்தில், ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் பிபிசி-யின் செயல்பாடுகள் மற்றும் அதற்கு கிடைத்த வருவாய் அளவு ஒத்துப்போகவில்லை. அந்த நிறுவனம் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் நடந்த பரிமாற்றங்களுக்கு கணக்கு காட்டப்படவில்லை. நிறுவனத்தின் ஊழியர்களிடம் இருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+