“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கமாட்டான்”.. ராஜ்யசபாவில் கணீர் குரலில் பேசிய கமல்!
டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனது முதல் உரையை இன்று ஆற்றினார் மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான கமல்ஹாசன். "ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கமாட்டான்." எனப் பேசியுள்ளார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஆண்டு மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன், தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகிறார். இந்நிலையில் ராஜ்யசபாவில் தனது முதல் உரையை ஆற்றினார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன் எம்.பி, "எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் பரமக்குடி என்று சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான்.
இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணா.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பிழைகளை ஏற்க முடியாது. பீகாரில் தொடங்கிய எஸ்ஐஆர் என்னும் நோய் நாடு முழுவதும் பரவுவதை அனுமதிக்க முடியாது. அதை தடுப்பதற்காகத்தான் எனது சகோதரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் முன்பு போராடி இருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் அவர் சட்டப் போராட்டம் நடத்தி இருக்கிறார்.
பட்ஜெட் உரை மீது நான் பேசுகிறேன். பள்ளிக்கூடத்தில் இருந்து இடைநிற்றல் செய்த ஒருவன் பொருளாதாரம் குறித்து பேசுவதாய் என நீங்கள் ஐயம் கொள்ளலாம். அது அப்படியே கூட இருக்கட்டும். ஆனால் இதில் ஒரு தமிழனாக எனக்கு சில கருத்துகள் இருக்கிறது. உங்கள் முன்னால் நிற்கக்கூடிய இந்த கமல்ஹாசன், காந்தி, பெரியார் என்னும் பேராசான்களின் பேரனும், அண்ணா என்னும் மாமனிதனின் மகனும் ஆவான். எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
எனது கருத்து உருவாக்கத்தில் வழிகாட்டியாக அவர் அமைந்தார். அவர் வழிகாட்டிய மையம் என்ற கொள்கையை தான் நான் கையில் வைத்திருக்கிறேன். அவர் உரையாற்றிய இதே அவையில் இருந்து நானும் பேசுகிறேன். நான் எனது மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறேன். இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்கு காயத்தை கொடுக்கலாம்.
நான் பேசும் இந்த உரையை கோபம் இல்லாமல் பேசுவதற்கு காந்தி எனக்கு கற்றுக் கொடுத்தார். புள்ளிவிவரத்துடன் பேசுவதற்கு பெரியார் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அண்ணா இந்த பெரும் அவையை புரிந்து கொள்வதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த மாபெரும் கட்டிடம் இருக்கவும் நாம் இன்றைய சுதந்திரத்தை அனுபவிக்கவும் இவர்கள்தான் போராடினார்கள்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்திருக்க மாட்டோம். நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவதில்லை எனது பகுத்தறிவு மூளை,கடவுள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டது. தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்.. அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கமாட்டான். நாளை எமதே" எனப் பேசியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications